குவின்ஸ்டவுனில் ஐந்தறை வீட்டின் மதிப்பு $926,000

குவின்ஸ்டவுனில் ஐந்தறை வீட்டின் மதிப்பு $926,000

2 mins read
f8861165-8d56-4cef-8335-d1edfed2287c
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) மறு­விற்­பனை வீட்டு விலை மூன்­றாம் காலாண்­டில் புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது. பத்­தாண்­டு­களுக்­கும் மேலாக மூன்­றா­வது காலாண்­டில்­தான் ஆகத் துரி­த­மான ஒன்­பது மாத வளர்ச்­சியை வீவக மறு­விற்­பனை வீட்டு விலை கண்­டி­ருப்­ப­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட தக­வல்­கள் தெரி­வித்­தன.

இரண்டாம் காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், ஜூலை முதல் செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் மறு­விற்­பனை விலை 2.9% அதி­கரித்­தி­ருந்­தது. 2.7% என்ற வீவ­க­வின் முன்­னு­ரைப்­பைக் காட்­டி­லும் கூடு­தல் விகி­தம் பதி­வா­கி­யுள்­ளது.

இவ்­வாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீவக வீட்டு விலை 9.1% வளர்ச்சி கண்­டுள்­ளது. கடை­சி­யாக 2010ஆம் ஆண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீட்டு விலை 11.3% வளர்ச்சி கண்­டது. கிட்­டத்­தட்ட 11 ஆண்­டு­கள் கழித்து அதே­போன்ற துரித வளர்ச்­சி­யைக் காண முடி­வ­தா­கக் கூறப்ட்­டது.

முதிர்ச்­சி­ய­டைந்த வட்­டா­ர­மான குவின்ஸ்­ட­வு­னில், இடைநிலையாக $926,000 விலை­யில் ஐந்­தறை வீடு­கள் விற்­ப­னை­யா­கின. மூன்­றாம் காலாண்­டில் பதி­வான ஆக விலை­யு­யர்ந்த தொகை இது என்று கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, புக்­கிட் மேரா­வில் $822,500 விலை­யிலும் தோ பாயோ­வில் $818,000 விலை­யி­லும் மறு­விற்­பனை வீடு­கள் விற்­ப­னை­யா­கின.

சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­க­மாக நாடும் குடி­யி­ருப்பு வட்­டா­ர­மாக குவின்ஸ்­ட­வுன் உள்ள நிலை­யில் முதல் காலாண்­டில் ஐந்­தறை வீடு­களின் இடைநிலை விலையாக $932,000 என்­றும் முதல் காலாண்­டில் $820,000 என்­றும் கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, மறு­விற்­பனை பரி­வர்த்­த­னை­க­ளின் எண்­ணிக்கை மூன்­றாம் காலாண்­டில் 19.4% அதி­கரித்­தி­ருந்­தது. இரண்­டாம் காலாண்­டில் 7,063 வீடு­கள் விற்­கப்­பட்­டதை அடுத்து மூன்­றாம் காலாண்­டில் 8,433 வீடு­கள் கைமா­றின.

ஆண்டு அடிப்­ப­டை­யில் இதே ஜூலை முதல் செப்­டம்­பர் கால­கட்­டத்­தில் கடந்த ஆண்­டில் செய்­யப்­பட்ட பரி­வர்த்­த­னை­க­ளைக் காட்டி­லும் இவ்­வாண்டு 8.3% கூடு­தல் பரி­வர்த்­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும் மூன்­றாம் காலாண்­டில் குறை­வான வீடு­க­ளையே வீவக வாட­கைக்கு அனு­ம­தித்­தது. இரண்டாம் காலாண்­டு­டன் ஒப்­பிடு­கை­யில் மூன்­றாம் காலாண்­டில் 5.1% குறை­வாக 10,417 வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன. இவ்­வாண்டு செப்­டம்­பர் மாத நில­வ­ரப்­படி, 57,321 வீவக வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டுள்­ளன. இது இரண்டாம் காலாண்­டு­டன் ஒப்­பிடு­கை­யில் 0.8% குறைவு.

மறு­விற்­பனை விலை, தொடர்ந்து ஆறா­வது காலாண்­டாக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாண்டு இறு­தி­வரை வளர்ச்சி தொட­ரும் என்று மறு­விற்­ப­னைச் சந்தை நிபு­ணர்­கள் கூறு­கின்றனர்.