பாதுகாக்கப்படும் கட்டடமாகிறது ‘கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ்’

தட்­டச்சு இயந்­தி­ரம்போல் காட்­சி­ அளிக்­கும் புகழ்­பெற்ற ‘கோல்­டன் மைல் காம்ப்­ளக்ஸ்’, அர­சாங்­கத்­தால் பாது­காக்­கப்­படும் கட்­ட­ட­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நக­ரச் சீர­மைப்பு ஆணை­யம் (யுஆர்ஏ) இப்­ப­ரிந்­து­ரையை முன்­வைத்து ஓராண்­டுக்­குப்­பின், தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

இவ்­வாறு பாது­காக்­கப்­படும் கட்­ட­ட­மாக அறி­விக்­கப்­பட்­ட­தால் கூட்டு விற்­ப­னைக்­கான வாய்ப்­பு­கள் பாதிக்­கப்­படும் என்று கட்­டட உரி­மை­யா­ளர்­க­ளி­டையே எழக்­கூடிய அக்­க­றை­க­ளைக் களைய, இதற்கு முன் நடை­மு­றைப்­ப­டுத்­தாத ஒரு திட்­டத்தை யுஆர்ஏ அறி­வித்­தது.

இதன்­படி, தளத்தை வாங்­கு­வ­தில் ஆர்­வம் காட்­டு­வோ­ருக்கு அத்­த­ளத்தை மேலும் கவர்ச்­சி­யுடை­ய­தாக்­கும் மேம்­பாட்­டுத் தெரிவு­கள் தொடர்­பில் ஊக்­கு­விப்பு­கள் அளிக்கப்­படும் என்று கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாறு நவீன, பெரு­ம­ள­வி­லான, நிலப்­பட்டா கொண்டு பாது­காக்­கப்­படும் கட்­ட­ட­மாக ‘கோல்­டன் மைல் காம்ப்­ளக்ஸ்’ திகழ்­கிறது என்று முன்­னரே பதிவு­செய்­யப்­பட்ட காணொளி வழி ஃபேஸ்புக்­கில் தெரி­வித்த திரு லீ, இம்­மு­டி­வைச் சாதா­ர­ண­மா­கக் கருதி­வி­டக்­கூ­டாது என்­றார்.

பாது­காக்­கப்­ப­டு­வது என்­பது ஒரு­வகை கட்­டுப்­பாடு எனச் சில உரி­மை­யா­ளர்­கள் கரு­த­லாம். கூட்டு விற்­ப­னைக்­குத் திட்­ட­மிட்டு அதில் வரும் தொகை­யைக் கொண்டு தங்­க­ளின் ஓய்­வு­க் கா­லத்­தை­யும் அவர்­கள் திட்­ட­மிட்­டி­ருக்­க­லாம். இதைத் தாம் அறிந்­தி­ருப்­ப­தாக திரு லீ கூறி­னார்.

கூட்டு விற்­பனை முயற்­சி­களை, பாது­காக்­கப்­படும் கட்­ட­டம் என்ற அறி­விப்பு எந்த வகை­யி­லும் வலுவற்­ற­தாக்­காது என்­ப­தற்­காக கட்­ட­டத்­திற்­குப் புதுப்­பொ­லிவு தரு­வ­தன் தொடர்­பில் வாங்­கு­வோ­ருக்கு யுஆர்ஏ ஊக்­கு­விப்­பு­கள் அளிக்­க­ உள்­ளது.

“இந்­தத் தளத்­திற்­கான வளர்ச்சி வாய்ப்பு, பாது­காக்­கப்­படும் என்ற நிலை­யு­டன் அதி­க­ரிக்­கிறது,” என்­றார் திரு லீ.

பாது­காக்­கப்­படும் பிர­தான கட்­டடத்­திற்கு அரு­கில் கிட்­டத்­தட்ட 30 மாடி உய­ரத்­தில் கோபு­ரக் கட்­டடம் ஒன்றை மேம்­பாட்­டா­ளர்­கள் கட்­டு­வ­தற்­குப் புதிய ஊக்­கு­விப்­புத் திட்­டம் அனு­ம­திக்­கும்.

எதிரே அமைந்­துள்ள அர­சாங்க நிலத்­தை­யும் இணைந்து தளத்­தின் எல்­லையை விரி­வு­ப­டுத்­த­லாம் என்று கூறப்­பட்­டது. இத­னால் நீக்­குப்­போக்­கு­டன் வடி­வ­மைப்­பைத் தீர்­மா­னிக்­க­லாம். மேம்­பாட்­டுச் செல­வு­க­ளைக் குறைப்­ப­தற்­காக வரிச் சலு­கை­களும் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இத்­த­கைய ஊக்­கு­விப்­புத் தொகுப்­புத் திட்­டம், கோல்­டன் மைல் காம்ப்­ளக்­சுக்கு மட்­டும் வழங்­கப்­ப­டு­வ­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!