பருவநிலை தொடர்பில் மேலும் திடமான உறுதிமொழிகளை உலகநாடுகள் எடுத்துவரும் வேளையில், சிங்கப்பூரும் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் ஓர் அணுகுமுறையை ஆராய்ந்து வருகிறது.
ஒரு குறிப்பிட்ட அளவுவரை கரியமில வாயு அல்லது பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களை வெளியேற்ற, நிறுவனங்களுக்கு 'கரியமில கழிப்பு' என்ற ஒருவகை அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
இந்த அனுமதிச்சீட்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை நிறுவனங்களுக்கு வழங்கும்.
அந்த வரம்பு நாளாக ஆகக் குறைக்கப்படும்.
தொழில்துறை சார்ந்த எரிசக்தி செயல்திறனை நிறுவனங்களுக்கு இடையே ஊக்குவிப்பதால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்றபோதும், அந்த முயற்சிக்கு இத்தகைய 'கரியமில கழிப்பு' திட்டம் துணைபுரியும் என்றது வர்த்தக, தொழில் அமைச்சு.

