ஜாலான் துக்காங் தங்குவிடுதி உணவு குறித்து விசாரணை

ஜாலான் துக்காங் தங்குவிடுதி உணவு குறித்து விசாரணை

1 mins read
f57b2630-2a24-44ee-8312-172f2aec07b7
-

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு தயாரித்து வந்த 'கேட்டரிங் சொலூஷன்ஸ்' நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று தெரிவித்தது.

உணவுப் பொட்டலங்களில் பூச்சிகளும் தலைமுடியும் இருப்பதைக் காட்டும் படங்கள் கடந்த வாரம் இணையத்தில் வெளிவந்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. தரம் இல்லாத உணவு குறித்தும் சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பது குறித்தும் ஊழியர்கள் முன்னதாக புகார் அளித்ததை அடுத்து, தங்குவிடுதியை நிர்வகித்து வரும் 'செம்ப்கார்ப் மரின்' உணவு நிறுவனத்தைக் கண்டித்ததுடன் ஊழியர்களிடம் மன்னிப்பும் கோரியதாகக் கூறப்பட்டது.