சுவா சூ காங் பொது நூலகத்தில் பசுமை, பிரம்மாண்டம்

நூலக விரும்­பி­க­ளுக்கு சுவா சூ காங் பொது நூல­கத்­தில் ஒரு வித்­தி­யா­ச­மான அனு­ப­வம் காத்­தி­ருக்­கிறது. பிரம்­மாண்­ட­மாக, பசுமை அம்­சங்­க­ளு­டன் அடுத்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று புதுப்­பொ­லி­வு­டன் நூல­கம் திறக்­க­வுள்­ளது.

உட்­பு­றத் தோட்­டம், நீரில் வள­ரும் செடி­க­ளைக் கொண்ட அறை, சுற்­றுச்­சூ­ழல் விழிப்­பு­ணர்­வுக்­கும் நீடித்த நிலைத்­தன்மை வாழ்­வுக்­கும் உத­வும் புதிய மின்­னி­லக்­கக் கற்­றல் வளங்­கள் போன்­ற­வற்றை இந்­நூ­ல­கத்­தில் காண­லாம்.

‘இயற்­கை­யு­டன் மீண்­டும் இணை­வோம்’ என்ற கருப்­பொ­ரு­ளில் அடுத்த தலை­முறை நூல­க­மாக இது விளங்­கும் என்று கூறப்­பட்­டது. சமூ­கத்­தின் தேவை­க­ளை­யும் விருப்­பங்­க­ளை­யும் கருத்­தில் கொண்டு நூல­கம் மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய நூலக வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி எங் செர் போங் கூறி­னார். மாற்றி அமைக்­கப்­பட்­டுள்ள நூலக வளா­கத்­தில், மக்­கள் உற­வாடி, கற்­ற­லில் ஈடு­பட்டு, இயற்கை மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பில் தங்­கள் அறிவை வளர்த்­துக்­கொள்­வர் எனத் தாம் நம்­பு­வதாக அவர் தெரி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட ஆறு கூடைப்­பந்­துக் கூடங்­க­ளின் அள­வில் இருக்­கும் நூல­கம், சுவா சூ காங்­கி­லுள்ள லாட் 1 கடைத்­தொ­கு­தி­யின் இரு மாடி­களில் அமைந்­தி­ருக்­கும்.

ஆறு வய­துக்­குக் குறைந்த பிள்ளை­க­ளைக் கொண்ட பெற்­றோர், தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் பய­னுள்ள வகை­யில் நேரத்­தைச் செல­வி­டும் நோக்­கில் மேல்­மாடி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!