மின்னிலக்கத் திறன் இல்லாத நடு வாழ்க்கைத் தொழில் நிபுணர்
களுக்கு உதவும் வகையில் உரு வாக்கப்பட்ட ஆறுமாதத் திட்டம் ஒன்றின் மூலம் அதில் பங்குபெறும் 25 விழுக்காட்டினருக்கு தங்கள் பயிற்சித் திட்டத்தை முடிக்கும் முன்னரே வேலை கிடைத்துவிடுகிறது.
இந்தத் திட்டத்தை ஏற்று நடத்தும் போஸ்டன் கன்சல்டிங் குருப் என்ற நிறுவனம் திட்டத்தில் பங்குபெற கடந்த பிப்ரவரி மாதம் 1,500 பேர் பதிவு ெசய்துகொண்டுள்ளதாக நேற்று தெரிவித்தது.
ஒன்பது பிரிவுகளாகப் பயிற்சி பெறும் இவர்களில் ஏழு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இம்மாத இறுதியில் தங்கள் பயிற்சியை முடித்துவிடுவர் என்று கூறியுள்ளது.
'த ரேப்பிட் அண்ட் இம்மர்சிவ் ஸ்கில் என்ஹான்ஸ்மண்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் எஸ்ஜியுனைடெட் மிட் கரியர் பாத்வேய்ஸ் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பின் நிறுவனப் பயிற்சிப் பிரிவின் ஒரு திட்டம்.
கொவிட்-19 கொள்ளைநோய் பொருளியல், வேலைவாய்ப்புகள் தொடர்பில் ஏற்படுத்திய தாக்கத்தை சமாளிக்க அரசாங்கம் இந்தத் திட்டத்தை சென்ற ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் பங்கேற்பவர்கள் தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்துகொண்டு இன்றியமையாத மின்னிலக்கத் திறன்கள் பெற்றிருப்பதை நோக்கமாகக் கொண்டது.
திட்டத்தில் பங்குபெற்ற முதல் பிரிவினரில் பாதிப் பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பயிற்சியை முடித்த இரண்டு மாதங்களுக்குள் வேலை கிடைத்ததாக போஸ்டன் கன்சல்டிங் குருப் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றோருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சாலட்ஸ்டாப், கிராப் போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தரவுகள், தொழில்நுட்பம் சார்ந்த பணிகள், மின்னிலக்க உத்திபூர்வ பணி, வர்த்தக தரவுகள் தொடர்பான பகுப்பாய்வு, தொழில்நுட்ப ஆலோசனை, சமூக ஊடக சந்தைப் பிரிவில் நிபுணத்துவம் என பல துறைகளில் இவர்களின் பங்கு அமைந்துள்ளது.
இவர்கள் தாங்கள் கற்ற திறன்
களைக் கொண்டு பணிபுரியும் நிறுவனங்களில் ஏற்படும் பிரச்
சினைகளைக் களைய உதவி புரிகின்றனர். பின்னர், அந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மின்னிலக்கத் தீர்வுகளைப் பரிந்துரை செய்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய தொடர்புத் தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, மின்னிலக்கப் பொருளியல் பல வேலைகளை உருவாக்கியுள்ளதாகவும் இது இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றும் கூறினார்.
ஆனால் சில நடு வாழ்க்கைத் தொழில் நிர்வாகிகளுக்கு வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்நோக்கலாம். அவர்களுக்கு இதுபோன்ற திட்டம் ஒரு பாலமாக அமையும் என்று விளக்கினார்.

