செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
06349623-8952-40c5-bf72-cb93c9324dd9
-

கவனமின்றி கார் ஓட்டி மூதாட்டிக்கு மரணம் விளைவித்தவருக்கு சிறை

நோரஸ்லான் அப்துல் அஸிஸ் என்ற காவல் நிலை இன்ஸ்பெக்டர் ஒருவர் சாலையில் கவனமின்றி வாகனம் ஓட்டி மூதாட்டி ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக அவருக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து விதமான வாகனங்களும் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான்காண்டுகளுக்கு முன், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி புளோக் 807Dஐ ஒட்டிய சுவா சூ காங் அவென்யூ 1க்கும் அதனுடன் சேரும் துணைச் சாலை சந்திப்பிலும் இந்த விபத்து நிகழ்ந்தது.

$10.9 மி. மோசடி: 257 பேர் மீது

பல பிரிவுகளில் விசாரணை

மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றம், முதலீட்டுத் திட்டம் தொடர்பான பணப் பட்டுவாடா மோசடி, மின் வர்த்தகம், கடன், சீன அரசாங்க அதிகாரியாக நடிப்பது போன்ற பல்வகை குற்றங்களில் ஈடுபட்டு $10.9 மில்லியன் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக 257 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் அனைவரும் அக்டோபர் 8ஆம் தேதிக்கும் அக்டோபர் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகள், பல போலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு வார சோதனையில் பிடிபட்டனர்.

இதுபற்றிக் கூறிய போலிஸ், "குற்றச்செயல்களுக்கு துணைபோவதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை பயன்படுத்த விடுக்கும் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும். ஏனெனில், இவை குற்றச்செயல்களுடன் தொடர்பிருந்தால், நீங்களும் இதில் சிக்க நேரிடும்," என்று கூறியது.

முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது மேலும் 40 குற்றச்சாட்டுகள்

கப்பல் எண்ணெய் திருட்டு தொடர்பாக சதித் திட்டத்தில் ஈடுபட்டு அதில் அமெரிக்க டாலர் 1.4 மில்லியனை லஞ்சமாகப் பெற முயன்றதாகக் கூறப்படும் பாய் கெங் பெங் என்பவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர் மீது தற்பொழுது விசாரணையில் இருந்து தப்பிக்க தமது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாகவும் இவர் மீதான சட்ட நடவடிக்கைகளை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுப்பட்டதாகவும் கூறி மேலும் 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப் பின் இவர் $1 மில்லியன் பிணைத் தொகையில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.