உலு பாண்டான் சமூக மன்றத்திற்குள் கார் புகுந்தது; இருவர் காயம்

உலு பாண்டான் சமூக மன்றத்திற்குள் கார் புகுந்தது; இருவர் காயம்

1 mins read
acf3826c-858b-4b12-a12f-0e8359296a5e
Roads.SG ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். -

உலு பாண்டான் சமூக மன்றத்திற்குள் கார் புகுந்ததில் இருவர் காயம் அடைந்தனர்.

எண் 170 கிம் மோ ரோட்டில் உள்ள அந்தச் சமூக மன்றத்தில் கார் விபத்து நிகழ்ந்ததாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி அளவில் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் 70 வயது ஆண் ஓட்டுநரும் 66 வயது பயணியும் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். இருவரும் சுயநினைவுடன் காணப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவர்களை மீட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

உலு பாண்டான் சமூக மன்றத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கதவுமீது கார் மோதியது.

விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.