தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பில்லை: அமைச்சர்

தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பில்லை: அமைச்சர்

1 mins read
9c812078-4834-48fe-9f24-a5fb38a3efe4
-

கொவிட்-19 புதிய தொற்று எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் அதிக ஆபத்­துள்ள நாடாக சிங்­கப்­பூரை சில நாடு­கள் வகைப்­ப­டுத்தி இருக்­கின்­றன. இத­னால் இங்கு வசிக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள மக்­க­ளுக்கு எந்த பாதிப்­பும் இல்லை என்று அமைச்­சர் ஓங் யி காங் நேற்று விளக்­கி­னார்.

அந்த நாடு­கள் விடுத்­தி­ருக்­கும் அத்­த­கைய அறி­விப்­பு­கள் அவற்­றின் குடி­மக்­க­ளுக்­குத்­தான் என்­பதை அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து அந்த நாடு­க­ளுக்­குச் செல்­லும், இரு­தடுப்­பூசிகளும் போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு அந்த அறி­விப்­பு­க­ளால் எந்த பாதிப்­பும் இல்லை என்­றார் அவர்.