கொரோனா பரவலுக்கு எதிரான 3 ‘தடைகள்’

கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழ வேண்­டிய நிலை ஏற்­பட்ட சூழ­லில் சிங்­கப்­பூர் மிக­வும் கவ­ன­மான அணு­கு­மு­றையைக் கைக்­கொண்டு வரு­வ­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் விளக்­கம் அளித்­தார்.

சில நட­வ­டிக்­கை­களை அனு­மதிப்­பது, மற்ற நடவடிக்­கை­க­ளுக்கு தடை விதிப்­பது என்ற அணு­கு­முறையை சிங்­கப்­பூர் நடை­மு­றைப்­படுத்தி வரு­கிறது என்றார் அவர்.

இத்­த­கைய அணு­கு­மு­றையைக் கையாண்டு சில சங்­க­டங்­க­ளு­டன் நாம் வாழும் பட்­சத்­தில் உண்­மை­யான சவாலை நாம் சமா­ளித்­து­விட முடி­யும். கடு­மை­யான பாதிப்­பை­யும் மர­ணங்­க­ளை­யும் கூடு­மா­ன­வரை குறைத்து அதே­நே­ரத்­தில் கட்­டம் கட்­ட­மாக பொரு­ளி­ய­லைத் திறந்­து­விட நம்­மால் முடி­யும் என்றாரவர்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று விகி­தத்தைக் கட்­டுப்­படுத்த கிரு­மிக்கு எதி­ரான மூன்று 'தடை­களை' சிங்­கப்­பூர் பயன்­ப­டுத்தி வரு­வதாக அமைச்சர் கூறினார்.

எல்லை கட்­டுப்­பா­டு­கள், தடுப்­பூசி, பாது­காப்பு நிபந்­த­னை­கள் ஆகி­யவை அந்த மூன்று தடை­கள். சிங்­கப்­பூ­ரின் அணு­கு­முறை உல­கத்­தி­லேயே தனித்துவமான ஒன்று என்று கூறிய அவர், கிரு­மியைத் துடைத்­தொ­ழிப்­பது கிருமி­யோடு வாழ்­வது இரண்­டை­யும் சிங்­கப்­பூர் சாதித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை யில் சிங்­கப்­பூ­ரில் மில்­லி­யன் பேருக்கு ஏறத்­தாழ 50 பேர் என்ற நிலை­யில் மரண விகி­தம் மிக­வும் குறை­வாக இருக்­கிறது.

ஆகை­யால் உல­கின் இதர பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், இது­வரை சிங்­கப்­பூர் தன் மக்­க­ளுக்கு மிக வலு­வான பாது­காப்பை அளித்து இருக்­கிறது என்று அமைச்சர் கூறி­னார்.

அனைத்­து­லக பயணிகளுக்கு சிங்­கப்­பூர் கத­வு­க­ளைத் திறந்­து­வி­டு­வ­தால் மக்­க­ளுக்குக் கிடைக்­கக்­கூ­டிய பல நன்­மை­க­ளை­யும் திரு ஓங் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!