சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பில் 14 பேர் மரணமடைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அவர்களுக்கு வயது 41 முதல் 97 வரை. மரணமடைந்தவர்களில் ஏழு பேர் ஆடவர்கள். ஏழு பேர் பெண்கள்.
புதிதாக மாண்டவர்களில் அஞ்சலக சேமிப்பு வங்கியின் (பிஓஎஸ்பி) தலைமை நிர்வாகியாக 24 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற பெர்ட்டி செங்கும் ஒருவர்.
அவருக்கு வயது 84. திரு பெர்ட்டி செங் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. புதிதாக மரணமடைந்தவர்களையும் சேர்த்து சிங்கப்பூரின் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை புதிதாக 3,637 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததாகத் தெரியவந்தது.
கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 165,663 ஆனது.