சிங்கப்பூர் மக்கள்தொகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் முதியவர்களின் விகிதம் ஏறத்தாழ 1.5 விழுக்காடாக இருக்கிறது.
ஆனால் கொவிட்-19 காரணமாக கடந்த 28 நாட்களில் மரணமடைந்தவர்களில், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்கள்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று நடந்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த நிலவரம் பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை சிறப்புப் பணிக்குழு நேற்று வலியுறுத்தியது.

