நூற்றுக்கணக்கில் பொறியாளர் நியமனம்: மைக்ரோன் திட்டம்

சில்­லு­க­ளைத் தயா­ரிக்­கும் 'மைக்­ரோன் டெக்­னா­லஜி' நிறு­வ­னம், வரும் ஆண்­டு­களில் நூற்­றுக்­கணக்­கான பொறி­யி­ய­லா­ளர்­களை ஆய்வு மேம்­பாடு மற்­றும் உற்­பத்­திப் பிரி­வு­களில் வேலைக்கு அமர்த்­தத் திட்­ட­மிட்­டுள்­ளது.

நிறு­வ­னத்­தின் வளர்ச்­சித் திட்­டங்­களில் ஓர் அம்­ச­மாக ஆள்­சேர்ப்பு நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

அமெ­ரிக்­கா­வைத் தலை­மை­ய­க­மா­கக்­கொண்டு இயங்­கி­வ­ரும் நிறு­வ­னத்­தில் ஏற்­கெ­னவே 1,500 சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள், வேலைக்­குச் சேர்க்­கப்­பட்­ட­னர்.

2019ஆம் ஆண்­டில் நிறு­வ­னத்­தின் உட்­லண்ட்ஸ் வளா­கம் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இந்த 1,500 ஊழி­யர்­களும் நிய­மிக்­கப்­பட்­ட­தாக நிறு­வ­னத்­தின் அனைத்­து­லக செயல்­பாட்­டுப் பிரி­வின் நிர்­வா­கத் துணைத் தலை­வர் மணிஷ் பாட்­டியா கூறி­னார்.

உல­க­ள­வில் அதன் உற்­பத்தி, ஆய்வு மேம்­பாட்­டுப் பிரி­வு­களை நிறு­வ­னம் அடுத்த பத்­தாண்­டு­களில் வலு­வாக்­கு­வ­தற்­காக ஏறத்­தாழ 150 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$202 பில்­லி­யன்) முத­லீடு செய்­ய­வுள்­ள­தாக மைக்­ரோன் புதன்­கி­ழ­மை­யன்று அறி­வித்­ததை அடுத்து, சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை நிறு­வ­னத்­தின் திட்­டம் என்ன என்­பதை திரு பாட்­டியா தெரி­வித்­தார்.

அனைத்­து­லக அள­வில் சில்லு­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. கார்­கள், மருத்­து­வச் சாத­னங்­கள் போன்­றவை உட்­பட வெவ்­வேறு பிரி­வு­களில் உற்­பத்தி­யும் இத­னால் தடைப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் மைக்­ரோன் நிறு­வனத்­தின் கீழ் கிட்­டத்­தட்ட 8,000 ஊழி­யர்­கள் வேலை செய்­கின்­றனர்.

அர­சாங்­கத்­து­டன் இணைந்து மேலும் உயர் மதிப்­பி­லான உற்­பத்தி, ஆய்வு மேம்­பாட்டு ஆற்­றல்­களை ஏற்­ப­டுத்­து­வதே மைக்­ரோன் நிறு­வ­னத்­தின் இலக்கு என்று திரு பாட்­டியா கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!