கண்ணாடிக் கதவை உடைத்து சமூக மன்றத்துக்குள் சென்ற கார்

போன விஸ்தா அரு­கில் அமைந்­துள்ள உலு பாண்­டான் சமூக மன்­றத்­துக்­குள் கார் ஒன்று சென்று மோதி­ய­தில் இரு­வர் காய­முற்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் நடந்த இச்­சம்­ப­வம் குறித்­துத் தங்­க­ளுக்கு மாலை 6.40 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக போலி­சார் நேற்று கூறி­னர்.

காரில் இருந்த 70 வயது ஆண் ஓட்­டு­ந­ரும் அவ­ரு­டன் இருந்த 66 வயது பெண் பய­ணி­யும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது சுய­நி­னை­வு­டன் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இரு­வ­ரும் தேசிய பல்­க­லைக்­கழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

சமூக மன்­றத்­தின் வாசல் கண்­ணா­டிக் கதவை உடைத்­துக்­கொண்டு கார் சென்­ற­தா­க­வும் பின்­னர் சமூக மன்­றத்­தின் வர­வேற்­புப் பகு­தி­யின் பின்­பு­றம்­வரை­யில் கார் போயி­ருந்­த­தா­க­வும் 'ரோட்ஸ்.எஸ்ஜி' ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விபத்து நடந்­ததை அடுத்து பதிவுசெய்யப்பட்ட காணொளி ஒன்று, பல சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

சம்­ப­வம் குறித்து போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

படம்: ஷின் மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!