ஹலிமா: பெண்கள் மீதே கொவிட்-19 தாக்கம் அதிகம்

கொவிட்-19 கொள்­ளை­நோ­யும் அத­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு கட்­டுப்­பா­டு­களும், ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­கள் மீதே மேலும் வலு­வான பாதிப்பை ஏற்­படுத்­தி­யுள்­ள­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று கூறி­னார்.

வீட்­டுப் பரா­ம­ரிப்­பில் அதி­கப் பொறுப்­பு­க­ளைப் பெண்­கள் ஏற்­றுள்ள நிலை­யில் கொள்­ளை­நோய் சூழ­லில் வேலை­யை­யும் பரா­ம­ரிப்­புப் பணி­யை­யும் பெண்­கள் ஒரே சம­யத்­தில் சமா­ளிக்க வேண்­டி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஜாமியா சிங்­கப்­பூர் ஏற்­பாடு செய்­தி­ருந்த '28வது முன்­மா­திரி அன்னை' விருது நிகழ்ச்­சி­யின்­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­கள் மீது மன­நல ரீதி­யாக இந்த கொள்­ளை­நோய் அதிக பாதிப்­பைத் தந்­துள்­ள­தா­க­வும் அவர் பகிர்ந்­து­கொண்­டார். சமூக, பொரு­ளி­யல் ரீதி­யாக கொள்­ளை­நோய் ஏற்­படுத்தி­யுள்ள விளை­வு­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வது, வீட்­டில் இருந்­த­வாறு கற்­றலை மேற்­கொள்­ளும் பிள்­ளை­களுக்கு உத­வு­வது போன்­ற­வற்­றைப் பெண்­கள் அதி­கம் சந்­திப்­ப­தால் இந்­நிலை ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!