சிங்கப்பூரின் ஆகப் பெரிய சிகிச்சை சார்ந்த தோட்டம்

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய சிகிச்சை சார்ந்த தோட்­டம், ஜூரோங் லேக் கார்­டன்ஸ் பகு­தி­யில் திறக்­கப்­பட்­டுள்­ளது. இத்­தோட்­டத்­தில் சிறப்­புத் தேவை­க­ளு­டைய சிறார், மூத்­தோ­ருக்­கான அம்­சங்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டது.

இவ்­வாறு சிறப்­புத் தேவை­களுடைய பிள்­ளை­க­ளுக்­கான ஒரு பகு­தியை ஒதுக்­கும் முதல் தோட்­டம் இது என்று தேசிய பூங்­காக்­கள் கழ­கம் நேற்று தெரி­வித்­தது. கிட்­டத்­தட்ட 3,100 சதுர மீட்­டர் அள­வில் தோட்­டம் அமைக்­கப்­பட்டுள்­ளது.

தோட்­டத்­தின் ஒரு பகு­தி­யில் கருப்­பொ­ருள் சார்ந்த வகை­யில் செடி­கள் வளர்க்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றால் நினை­வ­லை­கள் தூண்­டப்­படும் என்­றும் உணர்­வு­கள் தட்டி எழுப்­பப்­படும் என்­றும் கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாறு சிகிச்சை சார்ந்து திறக்­கப்­பட்­டுள்ள ஏழா­வது தோட்­டம் இது.

தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தோட்­டத்­தைத் திறந்­து­வைத்­தார்.

அறி­வி­யல் சார்ந்த கொள்கை அடிப்­ப­டை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட இத்­தோட்­டம், இயற்­கை­யு­டன் மக்­கள் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்­ள­வும் வரு­கை­யா­ளர்­க­ளின் மன­ந­லனை மேம்­ப­டுத்­த­வும் உத­வும் என்று கழ­கம் தெரி­வித்­தது.

கிட்­டத்­தட்ட $1 மில்­லி­ய­னுக்கு மேல் கிடைக்­கப்­பெற்ற நன்­கொடை மூலம் சிகிச்சை தோட்­டத்தை இந்த அள­வுக்கு மேம்­ப­டுத்த முடிந்­த­தாகக் கூறப்­பட்­டது.

முதல் சிகிச்­சைத் தோட்­டம் ஹோர்ட்­பார்க் பகு­தி­யில் 2016ல் திறக்­கப்­பட்­டது. 2030ஆம் ஆண்­டுக்­குள் 30 சிகிச்­சைத் தோட்­டங்­களை அமைக்க வேண்­டும் என்ற இலக்­கைக் கொண்­டுள்­ளது கழ­கம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!