ஊழியர்களுக்குத் தடுப்பூசி: நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை

ஊழியர்களுக்குத் தடுப்பூசி: நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை

1 mins read
a4a6a3e0-95d1-4c72-9253-a363300e66b3
-

வரும் ஜன­வரி முதல் தேதி­யி­லி­ருந்து முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­கள்­தான் வேலை­யி­டத்­துக்­குத் திரும்ப முடி­யும் எனும் புதிய கொவிட்-19 நட­வ­டிக்­கை­யால் தங்­க­ளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று வர்த்­த­கங்­கள் கூறி­யுள்­ளன. சிங்­கப்­பூ­ரில் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருப்­பதை அவை சுட்­டின.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான அமைச்­சு­கள்நிலைப் பணிக்­குழு நேற்று முன்­தி­னம் அறி­வித்த அந்த புதிய விதி­முறை, எல்லா ஊழி­யர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

கடந்த 270 நாட்­களில் கிருமி தொற்றி குண­ம­டைந்­தோ­ரும் வேலை­யி­டத்­துக்­குத் திரும்­ப­லாம்.

சிங்­கப்­பூர் சிறிய நடுத்­தர வர்த்­த­கங்­கள் சங்­கத்­தின் தலை­வர் கர்ட் வீ, புதிய விதி­மு­றையை வர­வேற்­றார். கடந்த நான்கு அல்­லது ஐந்து மாத­மா­கவே நிறு­வ­னங்­க­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி தங்­கள் ஊழி­யர்­களை ஊக்­கு­வித்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் உண­வ­கச் சங்­கத்­தின் தலை­வர் ஆண்ட்ரூ குவான், சங்­கத்­தில் உள்ள 5,000 உண­வ­கங்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் 95 விழுக்­காட்­டுக்கு மேற்­பட்டு இருப்­ப­தா­கக் கூறி­னார்.

அர­சாங்­கத்­தின் புதிய விதி­ முறையை வர்த்­த­கங்­கள் வர­வேற்­கும் என்­றார் அவர். ஏனென்­றால் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டா­விட்­டால், வர்த்­த­கத்­துக்கு மேலும் இடை­யூறு நிக­ழும் என்று திரு குவான் விளக்­கி­னார்.

தேசிய அள­வில், ஊழி­யர் அணி­யில் 96 விழுக்­காட்­டுக்கு தடுப்­பூசி போடப்­பட்டு விட்­டது. மேலும் 70% நிறு­வ­னங்­களில் அனை­வ­ருக்­கும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.