கொவிட்-19 கிருமித்தொற்று: மேலும் ஆறு பேர் மரணம்

கொவிட்-19 கிருமித்தொற்று: மேலும் ஆறு பேர் மரணம்

1 mins read
4fb8855c-9a72-47a8-b355-7de8e82c10c2
-

சனிக்­கி­ழமை 23ஆம் தேதி நில­வ­ரப்­படி கொரோனா தொற்­றால் ஏற்­பட்ட உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக சிங்கப்பூரில் மேலும் ஆறு பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அவர்­கள் 61 வய­துக்­கும் 91 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

இறந்­த­வர்­களில் நால்­வர் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­வில்லை. இரு­வர் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு நேற்­று­ முன்­தி­னம் தெரி­வித்­தது.

அவர்­கள் அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் ஆவர். இரு­வர் ஆண்­கள். நான்கு பேர் பெண்­கள் என்று அமைச்சு கூறி­யது.

அனை­வ­ருக்­கும் ஏற்­கெ­னவே வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­தன என்று கூறிய அமைச்சு, மேல்­வி­வ­ரம் அளிக்­க­வில்லை.

இதன் மூலம், சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றின் தொடர்­பில் இது­வரை 300 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 3,598 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

சமூ­கத்­தில் 2,804 பேருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் 790 பேருக்­கும் தொற்று ஏற்­பட்­டது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­வர்­களில் நான்கு பேருக்­கும் தொற்று உறு­தி­யா­னது.

உள்­ளூ­ரில் கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­வர்­களில் 471 பேர், 60 வய­தைத் தாண்­டி­வர்­ ஆவர்.