சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை முன்வைக்கும் சிங்கப்பூரர்கள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை முன்வைக்கும் சிங்கப்பூரர்கள்

1 mins read
82611497-7a4e-4973-9967-a2f7980c6ee8
-

குளி­ரூட்­டி­க­ளைக் குறை­வா­கச் சார்ந்­தி­ருப்­பது அல்­லது சுற்­றுச்­சூழலுக்கு உகந்த வகை­யில் வெப்பத்­தைத் தணிப்­பது போன்ற தீர்­வு­களைக் கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் பங்­கேற்­றோர் முன்­வைத்­துள்ளனர். நீண்­ட­கால நிலப் பயன்­பாடு குறித்து கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டது.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யா­டல் குறிப்­பாக நான்கு அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தி­யது. சிங்­கப்­பூரை அனை­வ­ரை­யும் பல்­வேறு அம்­சங்­களை­யும் உள்­ள­டக்­கச் செய்­வது, நிலைமைக்கேற்ப மாறும் ஆற்றலோடு மீள்­தி­ற­னு­டன் இருக்­கச் செய்­வது, நீடித்த நிலைத்­தன்மை­யுடன் செயல்­படவைப்­பது, மக்­கள் விரும்­பும் வகை­யில் இருந்­த­படி வித்­தி­யா­ச­மாக விளங்­க­வைப்பது ஆகி­யவை இந்த நான்கு அம்­சங்­கள்.

நீண்­ட­கால நிலப் பயன்­பாடு குறித்து மக்­க­ளின் கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்­றின் தொடர்­பி­லான முதற்கட்ட நட­வ­டிக்­கை­யில் முன்­வைக்­கப்பட்ட கருத்­து­க­ளி­லி­ருந்து இந்த அம்­சங்­கள் வரை­யப்­பட்­டன.

முதற்­கட்ட நட­வ­டிக்­கை­ கடந்த ஜூலை முதல் செப்­டம்­பர் மாதம் வரை நடை­பெற்­றது. அதில் 5,600க்கும் அதி­க­மா­னோ­ரைக் கொண்டு கருத்­தாய்வு நடத்­தப்­பட்டது.