பிரதமர்: காலவரம்பின்றி முடங்கி இருக்கவும் முடியாது, கட்டுப்பாடுகளைக் கைவிட்டு கட்டவிழ்த்துவிடவும் முடியாது

பிரதமர்: காலவரம்பின்றி முடங்கி இருக்கவும் முடியாது, கட்டுப்பாடுகளைக் கைவிட்டு கட்டவிழ்த்துவிடவும் முடியாது

2 mins read
c62c9098-623b-491e-9129-02ae1bac563b
-

சிங்­கப்­பூ­ரால் கால­வ­ரம்­பின்றி முடக்­க­நி­லை­யில் நிலை­குத்தி இருக்க முடி­யாது என்­றும் அதே நேரத்­தில் கட்­டுப்­பா­டு­களை விட்டு நிலைமையை கட்­ட­விழ்த்து விட­வும் முடி­யாது என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார். பிர­த­மர் நேற்று முன்­தி­னம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் இதைத் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 கிரு­மி­யு­டன் பாது­காப்­பாக வாழும் நிலையை அடை வதற்கு இப்­பா­தை­யில் சென்­றாக வேண்­டும். முடிந்­த­வரை குறைந்த இழப்­பு­க­ளு­டன் இந்­நி­லையை அடைய விரும்­பு­கி­றோம்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

பெருந்­தொற்­றைக் கையாள அமைச்­சு­நி­லைப் பணிக்­குழு வகுத்­துள்ள நடை­மு­றை­கள், இதை அடை­வ­தற்­கான சிறந்த வழி­யைப் பிர­தி­ப­லிக்­கிறது என்­றார் பிர­த­மர்.

சிங்­கப்­பூர் கூடு­தல் செயல்­பாடு­களைப் பாது­காப்­பு­டன் மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான புதிய நட வடிக்­கை­களை பணிக்­குழு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

அத்­து­டன் வாராந்­திர நோய்த்­தொற்று வளர்ச்சி விகி­தம் ஒன்­றுக்­குக் கீழே சென்­றால், மேலும் சில கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம் என்­றும் அது கூறி­யி­ருந்­தது.

கடந்த ஒரு வாரத்­தில் ஏற்­படும் சமூக அள­வி­லான தொற்­றுக்­கும் அதற்கு முந்­தைய வாரத்­துக்­கும் இடை­யி­லான விகி­தமே வாராந்­திர நோய்த் தொற்று வளர்ச்சி விகி­தம். இது கண்­கா­ணிக்­கப்­பட வேண்­டிய ஒன்று என பிர­த­மர் சுட்டினார்.

இரண்டு வாரத்­துக்கு முன்­னர் இந்த விகி­தம் ஒன்­ற­ரை­யாக இருந்­தது. அதா­வது இரண்டு வாரத்­துக்கு ஒரு முறை கிரு­மித் தொற்று எண்­ணிக்கை இரட்­டிப்­பா­னது.

தற்­போது அந்த விகி­தம் 1.15 ஆக உள்­ளது. ஒவ்­வோர் வார­மும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 15% கூடு­கின்­றன என்­பது இதன் பொருள். இந்த விகி­தத்­தில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் இரட்­டிப்­பாவதற்கு ஒரு மாதம் பிடிக்­கிறது.

நோய்த்­தொற்று வளர்ச்சி விகி­தம் ஒன்­றுக்­குக் கீழே குறைந்து, மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தீவிர சிகிச்சைப் பிரி­வு­க­ளி­லும் உள்ள நிலை சீராக இருந்­தால், சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம் என்­றும் பிர­த­மர் தெரிவித்தார்.

சிலர் கட்­டுப்­பா­டு­க­ளால் எரிச்­சல் அடைந்­துள்­ள­தை­யும் வேறு சிலர் துரிதமாக தளர்­வு­கள் அறி­விக்­கப்­ப­டுவ­தாகக் கவ­லைப்­ப­டு­வ­தை­யும் திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார்.

மக்­க­ளின் உணர்­வு­கள் தமக்குப் புரி­வ­தா­க­வும் தொட­ரும் குழப்­ப­மும் தடை­களும் நமக்­குச் சிர­மத்தை ஏற்­படுத்­தி­யுள்­ள­தா­க­வும் பிரதமர் லீ கூறினார்.

அனைவரும் தங்­கள் பங்­கைத் தொடர்ந்து செய்து, சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்துகொள்­ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.