ப. பாலசுப்பிரமணியம்
எதை விடுவது, எதை வாங்குவது என ஏராளமான விருப்பதெரிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது இவ்வாண்டின் மினோரா ஜுவல்ஸின் தீபாவளி நகை தொகுப்பு.
கேரளா நெக்லஸ் வகைகள் தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதாக மினோரா ஜுவல்ஸின் மூத்த ஊழியர் திருவாட்டி இந்திரா தெரிவித்தார்.
'போம்பே டிசைன்' ஜிமிக்கி வகைகள், இரண்டு அல்லது மூன்று நிறங்களில் வரும் தோடுகள், கோயில் ரக 'நெக்லஸ்' வகை, கல்கத்தா, துருக்கி, காசு மாலை வகைகள் ஆகியவை தற்போதைய பண்டிகை காலத்திற்காக கொண்டுவரப்பட்ட புதுரக ஆபரணங்களாகும்.
இரண்டு நிற மொத்தமான துபாய் மற்றும் துருக்கி டிசைன் வளையல்கள் நளினத்துக்கும் ஆடம்பரத்திற்கும் ஒரு புதிய அர்த்தமே தருகின்றன.
இளைய வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்து வரும் கவர்ச்சியான முகப்பு தாலி செயின் வகைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
கடையில் விற்கப்படும் அனைத்து நகைகளும் சந்தை விலையை காட்டிலும் சற்று குறைவாகவே இருக்கும் என்று குறிப்பிட்ட திருவாட்டி இந்திரா, வழக்கமான உள்ளூர் வாடிக்கையாளர்களிடமிருந்தும் இங்கு பணியாற்றும் மலேசிய வாடிக்கையாளர்களிடமிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்றார்.
இவ்வாண்டின் நகை விற்பனை கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தால் சற்று மந்தமாக தொடங்கினாலும் தீபாவளி நெருங்கிட, கூட்டம் திரும்பும் என்ற நம்பிக்கையை இவர் கொண்டுள்ளார்.
142 டன்லப் ஸ்திரிட்டில் அமைந்துள்ள மினோரா ஜுவல் நகைக்கடைக்கு நேரடியாக வந்து நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கில் வெற்றி பெறும் வாய்ப்பும் காத்திருக்கிறது.
'சாம்சங்' 49 இஞ் ஸ்மார்ட்' தொலைக்காட்சி பெட்டி ஒவ்வொரு மாத இறுதியிலும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப் படுகிறது.
இதோடு குறிப்பிட்ட முன்பணம் செலுத்தி, 6 மாத தவணை முறையில் நகையை வாங்கிக்கொள்ளும் திட்டமும் மினோரா ஜுவல்ஸ் நகை கடையில் உள்ளது.
- விளம்பரச் செய்தி

