200,000க்கும் மேற்பட்ட மூத்தோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

சிங்­கப்­பூ­ரில் 200,000க்கும் மேற்­பட்ட மூத்­தோர் கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 70 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட மூத்­தோ­ரில் 67 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கூறி­னார்.

இணை­யம் மூலம் நடத்­தப்­பட்ட சமூ­கப் பரா­ம­ரிப்பு தினக் கொண்­டாட்­டத்­தின்­போது அவர் இந்தத்­

த­க­வலை நேற்று வெளி­யிட்­டார்.

சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­களில் 95 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்­றும்

அமைச்­சர் தெரி­வித்­தார்.

"கடந்த சில வாரங்­கள் மிக­வும் சவால்­மிக்­க­தாக இருந்­தன. சமூக அள­வி­லான பாதிப்பு அதி­க­ரித்­துள்­ள­தால் சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்­கும் அழுத்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

"சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளின் கடு­மை­யான உழைப்பு, கடப்­பாடு, ஆத­ரவு ஆகி­ய­வற்­றால் மூத்­தோர் பாது­காப்­பாக இருக்­கின்­ற­னர்.

"இத­னால் இந்தச் சவால்­மிக்க கால­கட்­டத்­தி­லும் அவர்­க­ளால்

நிம்­ம­தி­யாக வாழ­வும் மூப்­ப­டை­ய­வும் முடி­கிறது.

"சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளின் மீள்­தி­றன், விடா­

மு­யற்சி ஆகி­யவை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக நாடு எடுத்­து­வ­ரும் முயற்­சி­கள் வெற்றி பெற பெரு­ம­ள­வில் பங்­க­ளித்­துள்­ளன," என்று சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்கு அமைச்­சர் மச­கோஸ் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

சமூ­கப் பரா­ம­ரிப்­புத் தினக் கொண்­டாட்­டத்­துக்கு ஒருங்­

கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு அமைப்பு ஏற்­பாடு செய்­தது.

இவ்­வாண்­டின் கொண்­டாட்­டம் 'சமூ­கப் பரா­ம­ரிப்பு நாய­கர்­க­ளு­டன் கொண்­டாட்­டம்' எனும் கருப்­

பொ­ரு­ளு­டன் நடை­பெற்­றது. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் காட்­டிய தன்­ன­லமற்ற செயல்­பா­டு­க­ளைக் கௌர­விக்க கொண்­டாட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

நிகழ்ச்­சி­யின்­போது 13 அமைப்பு­ க­ளுக்கு சமூ­கப் பரா­ம­ரிப்பு

விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. விருது­ க­ளைப் பெற்ற அமைப்­பு­களில் லியேன் அற­நி­று­வ­னம், சிங்­கப்­பூர் பங்­குச் சந்தை ஆகி­யவை அடங்­கும்.

இந்த விரு­து­கள் கடந்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு ஆத­ரவு அளிக்­கும் மற்ற அமைப்­பு­க­ளுக்கு இந்த விரு­து­கள் வழங்­கப்­ப­டு­

கின்­றன.

மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர் மச­கோஸ், வீடு வீடா­கச் சென்று தடுப்­பூசி போடும் குழுக்­

க­ளின் பெரும் பங்­க­ளிப்பை மேற்­கோள் காட்­டி­னார்.

"ஆறு சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், மருந்­த­கங்­கள் ஆகி­ய­

வற்­றி­லி­ருந்து வீடு வீடா­கச் சென்று தடுப்­பூசி போடும் 33 குழுக்­களை நிய­மித்­தோம்," என்­றார் அமைச்­சர் மச­கோஸ்.

கிரு­மித்­தொற்று நெருக்­க­டி

­நி­லை­யின்­போ­தும் துடிப்­பு­டன் மூப்

­ப­டை­தல் நிலை­யங்­கள், பரா­ம­ரிப்பு மையங்­கள் ஆகி­யவை திறக்­கப்­பட்­டுள்­ளதை அமைச்­சர் மச­கோஸ் சுட்­டி­னார்.

"கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நிலை நில­வி­வ­ரும்­போ­தி­லும் நல­மாக வாழ­வும் நல்ல முறை­யில் மூப்­ப­டை­ய­வும் மூத்­தோ­ருக்கு நாம் தகுந்த சூழலை ஏற்­ப­டுத்­திக்­கொடுக்கும் இலக்கை மறந்­து­

வி­டக்­கூ­டாது.

"200க்கும் அதி­க­மான துடிப்

­பு­டன் மூப்­ப­டை­தல் நிலை­யங்­க­ளை­யும் பரா­ம­ரிப்பு மையங்­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தும் திட்­டத்தை இவ்­வாண்டு தொடக்­கத்­தில் நான் பகிர்ந்­து­கொண்­டேன். இது­வரை அத்­த­கைய 60 நிலை­யங்­களை நாங்­கள் திறந்­து­விட்­டோம். அடுத்த ஆண்டு மேலும் 50 நிலை­யங்­கள் திறக்­கப்­படும்," என்று அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!