குறைந்த மருந்துள்ள தடுப்பூசி: பாதிக்கப்பட்டோரில் பலருக்கு மாற்று ஊசி

குறைந்த மருந்துள்ள தடுப்பூசி: பாதிக்கப்பட்டோரில் பலருக்கு மாற்று ஊசி

1 mins read
3ef72672-651b-4d2c-b11f-59d8e8aacedd
புக்கிட் மேரா பலதுறை மருந்தகத்தில் நேற்று கொவிட்-19 தடுப்பூசி போட பலர் காத்துக்கொண்டிருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்கிட் மேரா பலதுறை மருந்தகத்தில் குறைந்த மருந்துள்ள கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மாற்று தடுப்பூசி போடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அதற்கு ஏற்ப, நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்ட 117 பேரில் 86 பேருக்கு மாற்று ஊசியை போட்டுவிட்டதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களின் தலைமை நிர்வாகி ஏட்ரியன் ஏ தெரிவித்தார்.

இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை குறைந்த அளவிலான மருந்துள்ள தடுப்பூசி போடப்பட்டது.

இந்தப் பிழை மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் திரு ஏட்ரியன் ஏ. பாதிக்கப்பட்டோர் அனைவருடனும் தொடர்புகொண்டு மாற்று ஊசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.