வேறுபடும் விதிமுறை; அமைச்சர் விளக்கம்

முக்­கிய நடு­வ­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து திகழ புளூம்­பர்க் புதிய பொரு­ளி­யல் கருத்­த­ரங்கு

இன்­றி­ய­மை­யா­தது என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

முக்­கிய நடு­வ­மா­கத் தொடர்ந்து திகழ்­வது சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்­சிக்கு ஆத­ரவு அளிக்­கும் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் தர­மான வேலை­களை உரு­வாக்­கும் என்­றும் அமைச்­சர் கான் கூறி­னார்.

வர்த்­த­கக் கட்­ட­மைப்­பு­களை அமைத்­துத் தரு­வது கருத்­த­ரங்­கின் முக்­கிய நோக்­கங்­களில் ஒன்று.

எனவே, கருத்­த­ரங்கு நடை

பெறும் இடங்­க­ளி­லும் குறிப்­பிட்ட சில உண­வ­கங்­க­ளி­லும் அதி­க­பட்­சம் ஐந்து பேர் கொண்ட குழுக்­கள் ஒன்­றாக அமர்ந்து உண­வ­ருந்த அனு­மதி வழங்­கப்­படும் என்­றார் திரு கான். கருத்­த­ரங்­கில் கலந்து கொள்­வோர் குழுக்­க­ளாக இருந்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்த வேண்டி இருக்­கும். இதனை முன்­னிட்டு இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

"கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­வோர் வெவ்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­கள். ஒன்­றி­ணைந்து

கலந்­து­ரை­யாட அவர்­க­ளுக்கு கிடைக்­கும் வாய்ப்பை அவர்­கள் முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­வர்," என்­றார் திரு கான்.

பொது­மக்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட விதி­மு­றை­யி­லி­ருந்து கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­ளும்

பிர­மு­கர்­க­ளுக்­கான விதி­முறை வேறு­ப­டு­வது தொடர்­பாக சிலர் அதி­ருப்தி தெரி­வித்­தி­ருப்­ப­தைத் திரு கான் சுட்­டி­னார்.

விதி­முறை மாற்­றத்­தால் கிரு­மிப் பர­வல் ஏற்­ப­டக்­கூ­டும் என்று சிலர் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி­வரை கருத்­த­ரங்கு கெப்­பெல்லா சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நடை­பெ­றும்.

51 நாடு­க­ளி­லி­ருந்து 300க்கும் அதி­க­மா­னோர் கருத்­த­ரங்­கில் கலந்து­கொள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவர்­களில் தற்­

போ­தைய, முன்­னாள் உல­கத் தலை­வர்­களும் உல­க­ளா­விய தலைமை நிர்­வா­கி­களும் அடங்­கு­வர்.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க அதி­கா­ரி­கள் தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்

­ப­டுத்­து­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கருத்­த­ரங்கு நடை­பெறும் அனைத்து நாட்­க­ளி­லும் அதில் கலந்­து­கொள்­வோர் அன்­றா­டம் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­வோர் செல்­லும் உண­வ­கங்­க­ளுக்கு பொது­மக்­கள் சென்­றால் உள்ளே போவ­தற்கு முன்பு பரி­சோ­தனை செய்து கிரு­மித்­தொற்று இல்லை என உறுதி செய்­து­கொள்ள வேண்­டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!