பல்வேறு கல்வி ஆற்றல்களைக் கொண்ட மேலும் பல மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்துப் பயில்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்துப் பயில்வதற்கான கல்விப் பாதையை விரிவுபடுத்தியது பலன் அளித்திருப்பதை இது நிரூபிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைத் திட்டம் போன்ற அறிமுகத் திட்டங்களின் விளைவாகக் கூடுதல் வழக்கநிலை மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்திருப்பதாக ஐந்தில் மூன்று பலதுறைத் தொழிற்கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
நன்யாங், நீ ஆன், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிகள் இந்தத் தகவலை வெளியிட்டன. பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்
படைத் திட்டம் 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் வழக்க
நிலையில் பயிலும் உயர்நிலை நான்கு மாணவர்கள் உயர்நிலை ஐந்துக்குச் சென்று ஜிசிஇ
சாதாரணநிலை தேர்வை எழுதுவதற்குப் பதிலாக பலதுறைத் தொழிற்கல்லூரியில் அடிப்படைக் கல்வி பயில விண்ணப்பம் செய்யலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த மேலும் பல மாணவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளதாக நன்யாங், நீ ஆன், ரிபப்ளிக், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரிகள் தெரிவித்தன.
அதே காலகட்டத்தில் இணைப்பாட நடவடிக்கைகள் போன்ற
வற்றுக்காக போனஸ் புள்ளிகள் கழிக்கப்படுவதற்கு முன்பு
சாதாரணநிலை தேர்வில் 15 அல்லது அதற்கும் குறைவான புள்ளி களைப் பெற்ற மேலும் பல மாணவர்களை ஏற்றுக்கொண்டதாக அந்த நான்கு பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் கூறின.
கூட்டு மாணவர் சேர்ப்பு நடவடிக்கையின்போது பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேரும் இத்தகைய மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி கல்வி விவகார இயக்குநர் செங் சூன் லெங் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் இந்த விகிதம் 60 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு அது 75 விழுக்காடாக உயர்ந்தது.
இத்தகைய திட்டங்களின் காரணமாக பல்வேறு கல்விப் பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரி களில் தங்கள் கல்வியைத் தொடர்வது சாத்தியமாகி உள்ளதாக தேசிய கல்விக் கழகத்தின் இணைப் பேராசிரியர் ஜேசன் டான் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள், வேலை செய்யும் பெரியவர்கள் ஆகியோரின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
மாறாக, அவர்களுடைய ஆற்றல், ஆர்வம், வேலை அனுபவம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.