மின்சாரம், எரிவாயு, உணவு, வசிப்பிடம் ஆகியவற்றுக்கான விலைகள் ஏற்றம் கண்டதால் சிங்கப்பூரின் பயனீட்டாளர் விலைகள் கடந்த மாதம் மிக விரைவாக அதிகரித்தன.
அனைத்துப் பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதம், ஆண்டு அடிப்படையில் 2.5 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது 2.4 விழுக்காடு அதிகரித்திருந்தது.
இதற்கிடையே, வசிப்பிடம் மற்றும் தனியார் சாலைப் போக்கு
வரத்துக்கான செலவுகளைச் சேர்க்காத மையப் பணவீக்கம் கடந்த மாதம் 1.2 விழுக்காடு உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது 1.1 விழுக்காடு அதிகரித்தது. உணவு விலைகள் அதி
கரிப்பு இதற்குப் பெரும் பங்
களித்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று தெரிவித்தன.
மையப் பணவீக்கத்தைக் மிக உன்னிப்பாகக் கண்காணித்து சிங்கப்பூரின் நாணயம் தொடர்பான கொள்கைகளை ஆணையம் மறுஆய்வு செய்வது வழக்கம்.
மின்சாரம், எரிவாயு விலைகள் 9.9 விழுக்காடு ஏற்றம் கண்டன. பொது மின்சார சந்தையின்கீழ் வீடுகள் செலுத்தும் சராசரி மின்சாரக் கட்டணங்களின் விலை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மின்சார, எரிவாயு விலை 9.7 விழுக்காடு உயர்ந்தது.
உணவு விலைகளுக்கான பணவீக்கம் கடந்த மாதம் 1.6 விழுக்காடு ஏற்றம் கண்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது 1.5 விழுக்காடு அதிகரித்தது.
வசிப்பிடங்களுக்கான செலவு கள் 1.9 விழுக்காடு உயர்ந்தன.
தனியார் போக்குவரத்து விலைகளுக்கான பணவீக்கத்தில் மாற்றமில்லை.

