உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே 995ஐ அழைக்கவும்

உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டிய நிலை எழுந்­தால் மட்­டுமே 995 எனும் எண்ணை அழைக்­கும்­படி பொது­மக்­களை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

அவ­ச­ர­நி­லை­யற்ற சம்­ப­வங்­

க­ளுக்கு அந்த எண்ணை அழைக்க வேண்­டாம் என்று

வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இவற்­றில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றும் அடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில், அவ­ச­ர­நிலை மருத்­து­வச் சேவை­களை அழைத்த கொவிட்-19 நோயா­ளி­களில் 50 விழுக்­காட்­டி­ன­ருக்கு அவ­ச­ர­நிலை சிகிச்சை தேவை ஏற்­ப­ட­வில்லை என அதி­கா­ரி­கள் கூறி­னர்.

உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டிய நிலை­யின்­போது மட்­டுமே அவ­ச­ர­நிலை மருத்­துவ சேவை­யைப் பெற 995 எண்ணை அழைக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் நேற்று தெரி­வித்­தன.

உண்­மை­யி­லேயே உயி­ருக்­குப் போரா­டு­வோ­ருக்கு அவ­ச­ர­நிலை மருத்­துவ சேவை கிடைக்க இது வழி­வ­குக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து 21ஆம் தேதி வரை மருத்­துவ உதவி கேட்டு ஏறத்­தாழ 5,500 அழைப்­பு­கள் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

இவற்­றில் 20 விழுக்­காடு அழைப்­பு­கள் கொவிட்-19

நோயா­ளி­க­ளி­ட­மி­ருந்து வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அழைத்த நோயா­ளி­களில் 47 விழுக்­காட்­டி­ன­ருக்கு மருத்­து­வ­

ம­னை­க­ளின் அவ­ச­ர­நி­லைப்

பிரி­வில் வெளி­நோ­யாளி சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அவர்­கள் அதே நாளில் வீடு திரும்­பி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

15 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இரண்டு நாட்­கள் அல்­லது அதற்­கும் குறை­வாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!