சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்து கிடங்கு 2025ல் கட்டிமுடிக்கப்படும்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்து பராமரிப்புச் சேவை நிலையம் சாங்கியில் கட்டுப்பட்டு வருகிறது. வரும் 2025ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் நிறைவுபெறும்.

அப்போது மூன்று வெவ்வேறு ரயில் பாதைகளைச் சேர்ந்த சுமார் 200 ரயில்களையும் அதிகபட்சம் 760 பேருந்துகளையும் அங்கு நிறுத்தி பராமரிக்க முடியும்.

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பராமரிப்புச் சேவை நிலையம், அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் உள்ள 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்படும் சாங்கி ரயில் கிடங்குக்கு அருகில் புதிய நிலையம் உள்ளது.

அதன் கட்டடம் மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும்.

சுமார் இரண்டு பில்­லி­யன் வெள்ளிச் செல­வில் கட்­டப்­படும் அந்­தக் கிடங்­கின் கட்­டு­மா­னப் பணி­கள் எந்த அள­வில் உள்­ளன என்­பது பற்­றி நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் விவ­ரம் அளிக்­க­வில்லை. ஆனால் கிடங்கு வரும் 2025ல் கட்டி முடிக்­கப்­படும் என்று அது கூறி­யது. அந்­தக் கிடங்கு 2024ஆம் ஆண்­டில் கட்டி முடிக்­கப்­படும் என்று முன்­னர் எதிர்­பார்க்­கப்­பட்­டது. கிரு­மிப்­ப­ர­வ­லால் தாம­த­ம­டைந்த கட்­டு­மா­னத் திட்­டங்­களில் இது­வும் ஒன்று.

கட்­ட­டத்­தின் நிலத்­தடி மாடிக்­கான பணி­கள் முடி­வுற்­ற­தா­க­வும் மேலே உள்ள இரண்டு மாடி­க­ளுக்­கான பணி­கள் கிட்­டத்­தட்ட முடிந்­து­விட்­ட­தா­க­வும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!