16% சிங்கப்பூரர்களிடம் மின்னிலக்க நாணயம்

1 mins read
7ee57226-d5c3-4173-975a-0d316fea266e
-

சிங்­கப்­பூ­ரில் 18 வய­திற்கு மேற்­பட்­டோ­ரில் கிட்­டத்­தட்ட 16 விழுக்­காட்­டி­னர் மின்­னி­லக்க நாண­யம் வைத்­தி­ருப்­ப­தாக அண்­மைய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

'ஃபைண்டர்.காம்' எனும் இணை­யத்­த­ளம், மின்­னி­லக்க நாண­யம் தொடர்­பில் 22 நாடு­க­ளைச் சேர்ந்த 40,645 பேரி­டம் ஒரு கருத்­தாய்வை மேற்­கொண்­டது.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 985 பேர் ஆய்­வில் பங்­கு­கொண்­ட­னர். அவர்­களில் 15.6 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் மின்­னி­லக்க நாண­யம் வைத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர்.

ஆய்­வில் பங்­கு­கொண்ட 22 நாடு­களில், மின்­னி­லக்க நாண­யம் வைத்­தி­ருப்­போர் விகி­தத்­தில் சிங்­கப்­பூர் ஆறா­மி­டத்­தைப் பிடித்­துள்­ளது.

மலே­சியா (18%), ஆஸ்­தி­ரே­லியா (18%), இந்­தோ­னீ­சியா (17%), ஹாங்­காங் (16%) ஆகி­யவை ஆய்­விற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட மற்ற நாடு­களில் சில.

நைஜீ­ரி­யா­வில் 18 வய­திற்கு மேற்­பட்ட நால்­வ­ரில் ஒரு­வர், குறைந்­தது ஒரு மின்­னி­லக்க நாண­யத்­தை­யே­னும் வைத்­தி­ருப்­பது ஆய்­வில் தெரி­ய­வந்­தது. ஐந்து விழுக்­காட்­டிற்­கும் குறை­வான விகி­தத்­து­டன் ஜப்­பான் கடைசி இடத்­தைப் பிடித்­தது.

உல­க­ள­வில் 11.4 விழுக்­காட்­டி­ன­ரி­டம் மின்­னி­லக்க நாண­யம் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில் 'ஃபைண்டர்.காம்' நடத்­திய இது­போன்ற ஓர் ஆய்­வில், சிங்­கப்­பூர் பெரி­ய­வர்­களில் 19 விழுக்­காட்­டி­னர் மின்­னி­லக்க நாண­யம் வைத்­தி­ருந்­தது தெரி­ய­வந்­தது. இப்­போது அவ்­வி­கி­தம் குறைந்­து­விட்­டது.

ஆய்­வில் பங்­கு­கொண்­டோ­ரில், பிட்­கா­யின் (66.7%), எத்­தீ­ரி­யம் (52.4%), கார்­டானோ (23%) ஆகி­யவை செல்­வாக்­கு­மிக்க மின்­னி­லக்க நாண­யங்­க­ளாக உள்­ளன. ஆய்­வில் பங்­கேற்ற சிங்­கப்­பூ­ரரில் 8.2 விழுக்­காட்­டி­னர் 'எத்­தீ­ரி­யம்' மின்­னி­லக்க நாண­யத்தை வைத்­துள்­ள­னர்.