பெட்ரோல், டீசல் விலை மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக அதிகரிப்பு

1 mins read
660a8f67-8841-4762-9b77-e1f27127a504
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலை மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது.

எஸ்ஸோ நிறுவனம், நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 25) அதன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.

கடந்த வாரம், எஸ்பிசி, ஷெல், கால்டெக்ஸ், சினோபெக் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருந்தன.

லிட்டருக்கு நான்கைந்து காசு உயர்த்தப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வும் கொவிட்-19 கட்டுப்பாடுகளிலிருந்து பொருளியல் மீண்டெழுவதால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்திருப்பதுமே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரக் காரணம்.

குறிப்புச் சொற்கள்
பெட்ரோல்டீசல்