எச்சரிக்கை: டெங்கி பாதிப்பு அதிகரிக்கலாம்

எச்சரிக்கை: டெங்கி பாதிப்பு அதிகரிக்கலாம்

1 mins read
78280532-dfba-4e7b-b70d-b8ac7d044df8
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பரில் ஏடிஸ் கொசுப்பெருக்கம் 22% அதிகரித்துவிட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஏடிஸ் கொசுக்கள் பெருகி வருவதால் ஆண்டிறுதியில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பலரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதால், பகல் நேரத்தில் கொசுக்கடிக்கு ஆளாகும் வாய்ப்பும் அதனால் டெங்கி பரவும் வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் இதுவரை 4,500க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுவிட்டனர். சிங்கப்பூரில் இப்போது 12 டெங்கித் தொற்றுக் குழுமங்கள் உள்ளன.

பொதுச் சுகாதாரத்திற்கு டெங்கிக் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பரில் ஏடிஸ் கொசுப்பெருக்கம் 22% அதிகரித்துவிட்டது.

கேலாங் பாரு, ஜாலான் பெர்சே, கிளந்தான் லேன், கிளந்தான் ரோடு, ஜெலபாங் ரோடு, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81 உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஸ் கொசுப்பெருக்கம் மிகுதியாக உள்ளது.

கொசுப்பெருக்கம் இருக்கும் வீடுகளுக்கு $200 முதல் $400 வரை அபாரதாம் விதிக்கப்படும். மறுபடியும் தவறிழைப்போர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம். அங்கு அவர்களுக்கு $5,000 வரை அபராதம், மூன்று மாதம் சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்