எதிர்காலத்தில் பொதுச் சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் அதற்குத் தயாராக இருக்க ஆசியான் நாடுகள் எடுக்கும் கூட்டு முயற்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏறத்தாழ $8 மில்லியன் பெறுமானமுள்ள மருத்துவச் சாதனங்களை சிங்கப்பூர் நன்கொடையாக வழங்கியுள்ளதாகப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.
வட்டார நாடுகளில் கொவிட்-19 தடுப்பூசிகளை விரைவாக விநியோகம் செய்யத் தேவையான தளவாடச் சேவைகளை சிங்கப்பூர் விரைவுப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது, மூன்று உற்பத்தி ஆலைகளை அமைத்து தடுப்பூசி உற்பத்தி ஆற்றலையும்
விரிவுப்படுத்த சிங்கப்பூர் திட்ட
மிட்டுள்ளது.
சிங்கப்பூரில் தடுப்பூசி உற்பத்தி ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பயோஎன்டெக், சனோஃபி, தெர்மோ ஃபிஷர் சைன்டிஃபிக் ஆகிய பிரதான மருந்தியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மெய்நிகர் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் லீ இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கொவிட்-19 நெருக்கடி
நிலைக்குப் பிறகு, ஆசியான் நாடுகள் மேலும் எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.
பொதுமக்களுக்குத் தடுப்பூசி எளிதில் கிடைக்கும் முறை மேம்
படுத்தப்பட வேண்டும் என்று
பிரதமர் லீ வலியுறுத்தினார்.
தனக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை கொவேக்ஸ் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியதை அவர் சுட்டினார்.
கொவேக்ஸ் திட்டத்தின் தோழமை நாடுகளுக்கு சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தும் தலைமை தாங்குகின்றன.
இத்திட்டத்துக்கு உலகச்
சுகாதார நிறுவனம் ஆதரவு வழங்கு கிறது.
ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் இலக்கு.
இருப்பினும், தளவாடச் சவால்கள், தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கொவேக்ஸ் திட்டத்தின்கீழ் கடந்த மாதம் 122,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை இந்தோனீசியாவின் பாத்தாம், ரியாவ் தீவுகளுக்கு சிங்கப்பூர் வழங்கியது.
சிங்கப்பூருக்காக ஒதுக்கப்
பட்டுள்ள கொவிட்-19 ஆசியான் பதில் நடவடிக்கை நிதி ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் ஆசியான் செயலகத்துக்கும் வழங்கப்படும் என்றார் திரு லீ.

