டெங்கி பாதிப்பு அதிகரிக்கக்கூடும்

ஏடிஸ் கொசுக்கள் பெருகி வருவதால் ஆண்டிறுதியில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பலரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதால், பகல் நேரத்தில் கொசுக்கடிக்கு ஆளாகும் வாய்ப்பும் அதனால் டெங்கி பரவும் வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் இதுவரை 4,500க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுவிட்டனர். சிங்கப்பூரில் இப்போது 12 டெங்கித் தொற்றுக் குழுமங்கள் உள்ளன.

பொதுச் சுகாதாரத்திற்கு டெங்கிக் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பரில் ஏடிஸ் கொசுப்பெருக்கம் 22% அதிகரித்துவிட்டது.

கேலாங் பாரு, ஜாலான் பெர்சே, கிளந்தான் லேன், கிளந்தான் ரோடு, ஜெலபாங் ரோடு, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81 உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஸ் கொசுப்பெருக்கம் மிகுதியாக உள்ளது.

கொசுப்பெருக்கம் இருக்கும் வீடுகளுக்கு $200 முதல் $400 வரை அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் தவறிழைப்போர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம். அங்கு அவர்களுக்கு $5,000 வரை அபராதம், மூன்று மாதச் சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்,

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!