அதிகரிக்கும் மின்சக்தித் தேவையைச் சமாளிக்க வர்த்தக நடவடிக்கை
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி வளங்களை நோக்கிய நாட்டின் உருமாற்றத்திற்கு உதவ பசுமை மின்சக்தி வர்த்தகத்திற்கான வட்டார, அனைத்துலக ஒத்துழைப்பை சிங்கப்பூர் வலுப்படுத்தும்.
மேலும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை உள்ளூரிலும் வட்டார அளவிலும் பயன்
படுத்துவதற்கு வசதியாக அந்த எரிசக்திச் சான்றிதழுக்கான தேசிய தரநிலை நேற்று தொடங்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி வளங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கான ஆதாரமாக இச்சான்றிதழ்கள் விளங்கும்.
தங்களது கரியமில வாயு வெளியேற்றத்திற்குப் பதிலாக சொந்த சூரியசக்தித் தகடுகளை அல்லது மாற்று எரிசக்தியை உருவாக்க இயலாத நிறுவனங்கள் இந்தச் சான்றிதழ்களை வாங்கிக்கொள்ளலாம்.
பசுமை மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்திக்கான வளங்களை நோக்கிச் செயல்படும் அதே நேரத்தில் அதிகரிக்கும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க சிங்கப்பூருக்குக் கைகொடுக்கும் கூடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்தச் சான்றிதழ் திட்டம்.
வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நேற்று ஆசிய பசுமை எரிசக்தி மாநாட்டில் பங்கேற்றபோது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இந்த ஐந்து நாள் மாநாடு சிங்கப்பூரின் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் தொடர்பில் நடத்தப்படுகிறது.
வட்டார நாடுகளான இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் மற்றும் கம்போடியா ஆகியவற்றின் அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் நாடுகளின் மாற்று எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான உத்திகள் குறித்த யோசனைகளை வெளிப்படுத்தினர்.
வட்டார பசுமை மின்சக்தி வர்த்தகத்திற்கு ஊக்கமூட்டும் வகையில் சிங்கப்பூர் தனது சொந்த பசுமை எரிசக்தி வர்த்தகக் கட்டமைப்பை அதன் வட்டார பங்காளி
களுடன் இணைந்து விரிவுபடுத்த உள்ளது. உலக வர்த்தகர்களை இந்த வட்டாரத்திற்குக் கவர்ந்திழுப்பது அதன் நோக்கம்.
"இதுபோன்ற நடவடிக்கை வட்டார மின்சார உற்பத்தியை அதிகரிக்க உதவும். அதன் மூலம் எல்லைதாண்டிய மின்சக்தி வர்த்தக வளர்ச்சியை வேகப்படுத்த முடியும்," என்றார் டாக்டர் டான்.
இதன் ஒரு பகுதியாக மலேசியா, இந்தோனீசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடு
களிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான சோதனை நடவடிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

