பத்து மாத தொடர் ஏற்றத்திற்குப் பின்னர் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை வளர்ச்சி செப்டம்பர் மாதம் இறக்கம் காணப்பட்டது. உயிர்
மருத்துவத்துறை உற்பத்தியில் காணப்பட்ட பலவீனம் இதற்கு முக்கிய காரணம் என்று சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தரவு அறிக்கை குறிப்பிட்டது.
உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் இந்த செப்டம்பரில் 3.4 விழுக்காடு சரிவு கண்டது. அதேநேரம் இந்த ஆண்டுக்காண்டு வளர்ச்சி ஆகஸ்ட்டில் 11 விழுக்காடு உயர்ந்திருந்தது.
உயிர்மருத்துவத் துறை உற்பத்தியை விலக்கிவிட்டுக் கணக்கிட்டால் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் செப்டம்பர் மாத வளர்ச்சி 9.4 விழுக்காடு ஆகும்.
உற்பத்தியின் வளர்ச்சி (இந்த) அக்டோபர் மாதம் மீளும் என்று எதிபார்க்கிறோம். இருப் பினும் அது ஒற்றை இலக்கத் திலேயே இருக்கக்கூடும். பகுதி மின்கடத்தித் துறை முழு அள பில் செயல்படும் நிலை உள்ள தால் இந்த எதிர்பார்ப்பு நிலவு கிறது," என மேபேங் கிம் எங் பொருளியல் நிபுணர்கள் சுவா ஹாக் பின், லீ ஜு யே கூறினர்.

