தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துன்புறுத்தல்: செல்லப்பிராணி பராமரிப்பு நிலையத்திடம் விசாரணை

1 mins read
5c9930b0-07f8-498d-b999-4b47e460176a
-

செல்­லப்பிரா­ணி­கள் பரா­ம­ரிப்பு நிலை­யம் ஒன்று அதன் பரா­ம­ரிப்­பில் உள்ள நாயைத் தொல்­லைப்­

ப­டுத்­தி­ய­தன் தொடர்­பில் புலன் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

பரா­ம­ரிப்­பா­ளர் ஒரு­வர் அந்த பழுப்பு நாயை அடிப்­ப­தை­யும் அதன் கழுத்தை நெரிப்­ப­தை­யும் காட்டு காணொ­ளிப்­ படம் ஒன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றப்­பட்­டது. சனிக்­கி­ழமை (அக்­டோ­பர் 23) மாலை 6.26 மணிக்கு அந்­தத் துன்­பு­றுத்­தல் சம்­ப­வம் நடை­பெற்­ற­தாக காணொளியின் அடிக்­கு­றிப்­பில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

இச்­சம்­ப­வம் குறித்து தேசிய பூங்கா வாரி­யத்­தின் கீழ் செயல்­படும் விலங்கு மற்­றும் கால்­ந­டைப் பரா­ம­ரிப்பு சேவை நிலை­யம் விசா­ரித்து வரு­வ­தாக அந்த வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

தொடர்ந்து, வாரி­யத்­தின் சமூக விலங்­குப் பரா­ம­ரிப்­புப் பிரி­வின் இயக்­கு­நர் திரு­வாட்டி ஜெசிகா குவோக் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

"விலங்கு துன்­பு­றுத்­தல் குறித்து பொது­மக்­கள் தெரி­விக்­கும் எல்லாக் கருத்­து­ரைப்­பு­களும் கடு­மை­யா­ன­வை­யா­கக் கரு­தப்­படும்," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, சிராங்­கூன் வட்­டா­ரத்­தில் செயல்படும் 'த ஃபர் ரூம்' எனப்­படும் செல்­லப்பிரா­ணி­கள் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தின் ஊழி­யர் ஒரு­வர் அந்­நி­லை­யத்­தின் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் அறிக்கை ஒன்றை பதி­வேற்றி உள்­ளார்.

சம்­ப­வம் குறித்து வருத்­த­ம­டை­வ­தா­க­வும் நாயின் உரி­மை­யா­ள­ரி­டம் மன்­னிப்­புக் கோரு­வ­தா­க­வும் அந்த அறிக்­கை­யில் அவர் கூறி­யுள்­ளார்.