செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
4032a867-39fc-45ce-a4dd-1a62f31582e9
-

குற்றமிழைத்த தம்பதி

சுகாதார அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் குற்றவாளிகள் என்று நேற்று அறிவிக்கப்பட்டனர். ஷி ஷா, 38, என்னும் பெண்மணி மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஏற்கெனவே கிருமி தொற்றிய அவரது கணவரான ஹு ஜுன், 40, என்பவரைப் பற்றிய தகவல்கள், நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் அப்பெண் பொய் கூறியதாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தம்பதியினருக்கான தண்டனை நவம்பர் 10ல் அறிவிக்கப்படக்கூடும்.

ஆடவர் தப்பியோட உதவிய மூவர்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $1.2 பில்லியன் முத­லீட்டு மோச­டி­ ஒன்­றில் சம்­பந்­தப்­பட்ட வர்த்­த­கர் ஒரு­வர் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாட்­டுக்­குத் தப்­பிச் செல்ல உத­வி­ய­தாக மூன்று ஆட­வர்­கள் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. கீரன் மார்­கஸ் ஃபாங் குவான் வெய், 31, ஆல்­வின் ஒயே வெய் ஸோங், 37, டிங் குவோன் சுவோ, 63, ஆகி­யோரே அந்த மூவர். சிங்­கப்­பூ­ரர்­க­ளான இவர்­கள், இங் யு ஸி, 34, என்­னும் வர்த்­த­கர் மீது போலிஸ் விசா­ரணை நடை­பெ­று­வது தெரிந்­தும் அவர் சிங்­கப்­பூரை விட்டு ஓட இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் உத­வி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. வேண்­டு­மென்றே நீதி­யைத் தடுக்­கச் சதி செய்­த­தாக இந்த மூவர் மீதும் தலா ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. டிங் மீதும் ஒயே மீதும் சட்­ட­வி­ரோத சூதாட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­பட்­டன.

சிறுவனை நிர்வாணப்படுத்திய ஆடவருக்குச் சிறைத் தண்டனை

ஈராண்­டு­க­ளுக்கு முன் நிகழ்ந்த முறைத்­துப் பார்க்­கும் சம்­ப­வம் தொடர்­பில் பதின்ம வயது சிறு­வனை அவ­மா­னப்­ப­டுத்­தி­யது தொடர்­பாக ஆட­வர் ஒரு­வ­ருக்கு நேற்று மூன்று வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. துன்­பு­றுத்­தல் மற்­றும் வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­து­தல் ஆகிய குற்­றங்­க­ளுக்­காக முகம்­மது நூர் ஃபரிஸ்­வான் ரிஸ்­வான், 27, எனப்­படும் அந்த ஆட­வ­ருக்கு இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2019 மார்ச் 12ல் சம்­ப­வம் நிகழ்ந்­த­போது பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னின் வயது 17. பதின்ம வயதினர் என்பதால் அவ­ரைப் பற்­றிய விவ­ரங்­கள் நீதிமன்றத்தில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. முறைத்­துப் பார்த்­த­தற்­குத் தண்­ட­னை­யாக மூன்று இளை­யர்­கள் ஒன்­று­கூடி அச்­சி­று­வ­னுக்கு இரண்டு தெரி­வு­க­ளைக் கூறி­னர். அடி­வாங்­கு­வது அல்­லது உடை­க­ளைக் களை­வது ஆகியன அத்தெரிவுகள். அடி வாங்­கு­வ­தைத் தவிர்க்க உடை­களை அவிழ்க்க அச்­சி­று­வன் சம்­ம­தித்­தார். அது வாட்ஸ்­அப் குரூப் ஒன்­றில் பகி­ரப்­பட்டு பின்­னர் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது. உடை­களை அவிழ்த்து நிர்­வா­ணக்கோல­மா­ன­தும் அதனை தமது பள்­ளித்­தோ­ழர்­கள் பலர் பார்த்­த­தும் சிறு­வ­னுக்கு பெருத்த அவ­மா­னத்­தைக் கொடுத்­த­தாக அர­சுத்தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார். இச்­சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய டேனி­யல் முகம்­மது யாஷிம், 23, என்­ப­வ­ருக்கு இவ்­வாண்டு செப்­டம்­பர் 16ல் 18 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஐக்கிய அரபு சிற்றரசுகளுடன் சிங்கப்பூர் ஆலோசனை

சிங்கப்பூரும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் தங்களது நாட்டின் கொவிட்-19 நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர். அபுதாபிக் கும் துபாய்க்கும் கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாள் வருகை அளித்த சிங்கப்பூரின் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா சையது அல்-நேயனைச் சந்தித்து உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உன்னத அரசதந்திர உறவுகளை அவர்கள் மறுஉறுதிப்படுத் தினர். டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் பொன் விழா கொண்டாடப்பட இருப்பதையொட்டி சிங்கப்பூரின் வாழ்த்துகளை அமைச்சர் ஷேக் அப்துல்லாவிடம் டாக்டர் மாலிக்கி தெரிவித்துக்கொண்டார். மேலும் மத்திய கிழக்கில் முதல்முறையாக நடத்தப்படும் 'எக்ஸ்போ 2020 துபாய்' நிகழ்வை ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஏற்று நடத்துவதற்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, அந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் அரங்கிற்கு டாக்டர் மாலிக்கி வருகை அளித்ததாக சிங்கப்பூரின் வெளி யுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.