உலகம் முழுவதும் செயல்படும் மாபெரும் மின் வர்த்தக நிறுவனமான அமேசான், அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் கூடுதலாக 200 வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ஏஷியா ஸ்குவேர் டவர் ஒன்றில் அதன் புதிய அலுவலகம் அமைகிறது. புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்த சிங்கப்பூருக்கான அமேசான் நிறுவன நிர்வாகி ஹென்றி லோ, தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத துறைகளில் வேலைகள் இருக்கும் என்றார்.
தற்போது, அமேசான் நிறுவனத்தில் 2,000 ஊழியர்கள் முழுநேரமாகவோ பகுதி ேநரமாகவோ வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்.
2019ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.