‘தீவிரவாதம் ஒரு சமயத்துடன் தொடர்பானதல்ல’

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

தீவி­ர­வா­தத்தை எந்த ஒரு குறிப்­பிட்ட சம­யத்­து­ட­னும் தொடர்புபடுத்­து­வது தவ­றா­னது என்­றும் ஒவ்­வொரு சம­யத்­தி­லும் அவ­ர­வர் கார­ணங்­க­ளுக்­கா­க சம­யத்­தைத் தவ­றான வழி­யில் பின்­பற்­றும் நம்­பிக்­கை­யா­ளர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

பௌத்தம், கிறிஸ்­து­வம், இந்து, இஸ்­லாம் என வெவ்­வேறு சம­யங்களைச் சேர்ந்த தீவி­ர­வா­தி­கள் இவ்வட்­டா­ரத்­தில் இருந்­துள்­ளதைச் சுட்­டிக்காட்டி, ஒரு குறிப்­பிட்ட சமயத்­து­டன் தீவி­ர­வா­தத்­தைத் தொடர்பு­ப­டுத்­தும் சிந்­த­னை­யி­லி­ருந்து விடுபட அவர் அறை­கூ­வல் விடுத்­தார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மத்­திய கிழக்கு கல்­விக் கழ­கம் 'ஸூம்' மெய்­நி­கர் வழியே நேற்று மாலை ஏற்­பாடு செய்­தி­ருந்த விரி­வு­ரை­யின் கேள்வி-பதில் அங்­கத்­தில் தீவி­ர­வா­தத்­திற்­கான சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாடு குறித்த கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

"அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­கா­கவோ மற்ற கார­ணங்­க­ளுக்­கா­கவோ ஒவ்­வொரு சம­யத்­தி­லும் அந்­தச் சம­யத்­தைத் தவ­றான வழி­யில் பயன்­ப­டுத்­து­வோர் இருக்­கத்­தான் செய்­கி­றார்­கள் என்­பதை நாம் உண­ர­வேண்­டும்," என்­றார் அவர்.

மத்­திய கிழக்கு வட்­டா­ரம் பற்றிய ஆழ­மான புரி­தலை ஊக்கு­ வித்த மறைந்த முன்­னாள் அதி­பர் எஸ் ஆர் நாதன் பெய­ரில் ஆண்டு­ தோ­றும் ஏற்­பாடு செய்­யப்­படும் 'எஸ் ஆர் நாதன் கௌரவ விரி­வு­ரை­யின்' தொடக்க உரையை அமைச்­சர் சண்­மு­கம் ஆற்­றி­னார்.

மத்­திய கிழக்கு வட்­டா­ரத்­துக்­கும் தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்­கு­மான தொடர்பு பன்­மு­க­மா­னது என்­றும் அங்கு இடம்­பெ­றும் மேம்­பா­டு­கள் இவ்வட்­டா­ரத்தை வலு­வாகப் பாதிக்­கும் என்றும் அமைச்­சர் கூறி­னார்.

மத்­திய கிழக்கு வட்­டா­ரம் சந்­திக்­கும் அண்மை மேம்­பா­டு­கள், தென்­கி­ழக்­கா­சி­யா­வு­ட­னான தொடர்­பு­கள், அதன் விளை­வு­கள் போன்­ற­வற்றை அவர் விளக்­கி­னார்.

அந்த உரை­யில் தீவி­ர­வா­தத்தை மேற்­கோள் காட்­டி­னார் அமைச்­சர். தென்­கி­ழக்­கா­சி­யா­வில் உள்ள தீவி­ர­வா­தி­கள் மத்­திய கிழக்­கில் இடம்­பெ­றும் பூசல்­க­ளின் தாக்­கத்­தால் அங்­கு சென்று தீவி­ர­வா­தக் குழுக்­களில் இணைந்து பயிற்சி பெற்று மேலும் தீவி­ர­வாத சிந்­த­னை­யைக் கொள்­கின்­ற­னர் என்­றார்.

மீண்­டும் திரும்­பும்­போது தென்­கி­ழக்­கா­சி­யா­விற்கு பெரும் அபா­யத்தை விளை­விக்­கின்­ற­னர் என்று கூறிய அவர், இரண்டு வட்­டா­ரங் களின் நெருங்­கிய தொடர்­பை­யும் மத்­திய கிழக்­கில் இடம்­பெ­றும் நிகழ்­வு­க­ளின் வலு­வான தாக்­கத்­தைப் பற்­றி­யும் குறிப்­பிட்­டார்.

இரு வட்­டா­ரங்­க­ளின் ஆழ­மான பொரு­ளா­தார உறவைச் சுட்­டிய அவர், மத்­திய கிழக்கு நாடுகளு டனான சிங்கப்பூர் வர்த்­த­கம் 2019ஆம் ஆண்­டில் கிட்­டத்­தட்ட $60 பில்­லி­ய­னாக இருந்­தது என்­றும் இது ஆண்டு­தோ­றும் 4.2% வளர்ச்­சி­யை ஐந்­தாண்­டு­க­ளா­கக் கண்­டுள்­ளது என்­றும் கூறி­னார்.

ஏறத்­தாழ 300 மில்­லி­யன் முஸ்­லிம்­கள் வசிக்­கும் தென்­கி­ழக்­கா­சி­யா­விற்­கும் இஸ்­லாம் சம­யத்­தைப் பிர­தான சம­ய­மா­கக் கொண்­டுள்ள மத்­திய கிழக்­கிற்­கு­மான சமய அடை­யா­ள­மும் பின்னிப்­பி­ணை­யப்­பட்­டது. ஐக்­கிய அரபு சிற்­ற­ரசுகளின் கலா­சார விவ­கா­ரங்­க­ளுக்­கான துணை அமைச்­சர் ஒமர் சைஃப் ஜொபா‌ஷ் இவ்­வாண்­டின் விரி­வு­ரையை ஆற்­றி­னார்.

சிற்­ற­ர­சிற்கு சிங்­கப்­பூர் எப்­போ­தும் முன்­மா­தி­ரி­யா­கவே இருந்­து­வந்­துள்­ளது என்று கூறிய அவர், சிங்­கப்­பூ­ரி­ட­மி­ருந்து கற்­றுக்கொண்­டுள்­ள­தா­க­வும் இங்கு பலமுறை வந்­து­சென்­றுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார். பல வழி­களில் சிங்­கப்­பூ­ரைப் போன்று விளங்க முயற்சி செய்­துள்­ள­தா­க­வும் சொன்ன அவர், அதற்­காக சிங்­கப்­பூ­ருக்கு நன்றி சொல்­வ­தா­க­வும் கூறி­னார்.

கடந்த 2017ஆம் ஆண்டு 'இளம் முஸ்­லி­முக்­கான கடி­தங்­கள்' எனும் நூலை எழு­திய திரு ஒமர், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சுகளின் வெளி­யு­றவுக் கொள்­கை­கள், உள்­நாட்டு மேம்­பா­டு­கள் குறித்து பேசி­னார். அவை தனது நட்பு ரீதி­யான வலி­மையை எவ்­வாறு மேம்­ப­டுத்த உள்­ளது என்­பது குறித்து எழுந்த கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

'எமி­ரேட்ஸ் ஏர்­லைன்ஸ்' விமான நிறு­வ­னத்தை மேம்­ப­டுத்­தி­ய­வ­ரான அவர், ஒரு விமா­னத்­தி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான நக­ரங்­களை துபா­யு­டன் இணைக்­கும் மாபெ­ரும் நிறு­வ­ன­மாக அது வளர்ச்­சி­ய­டைந்­தது குறித்து பேசி­னார். அத­னால் அர­சி­யல் ரீதி­யான எழுச்சி, சக்தி வளர்ந்­துள்­ள­தா­க அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!