ஒளியைக் கொண்டு ஒற்றைக் கிருமியைப் பிடிக்கும் கருவி

ஒளியைக் கொண்டு ஒற்றைக் கிருமியைப் பிடிக்கும் கருவி

1 mins read
f2fb723e-b87b-4912-80ba-69c33e8ec268
சில்லைப் பிடித்தபடி என்டியூவின் ஆய்வு நிபுணர் லீ ஸென்யூ. படம்: என்டியூ -

முதன் முறை­யாக, சிங்­கப்­பூ­ரில் ஒளி­யைக் கொண்டு, ஒற்­றைக் கிரு­மி­யைப் பிடித்து வேறு இடத்­துக்கு மாற்­றும் சில்லை ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

இக்­க­ருவி, வெவ்­வேறு அள­வு­களில் உள்ள வெவ்­வேறு வகைக் கிரு­மி­க­ளைப் பிடித்து, அவற்றை வேறு இடத்­துக்கு மாற்றி, வகைப்­ ப­டுத்­து­கிறது.

இந்த சில்லு, 90 முதல் 120 நானோ­மீட்­டர் குறுக்­க­ளவு கொண்ட எடெ­னோ­வை­ரஸ் எனும் பொது­வ­கைக் கிரு­மி­களில் வேலை செய்­கிறது. இந்த வகைக் கிரு­மி­கள், சளி போன்ற அறி­கு­றி­களை உரு­வாக்­கு­கின்­றன.

எடெ­னோ­வை­ரஸ் கிரு­மி­கள், கொவிட்-19 தொற்றை உண்­டாக்­கும் சார்ஸ் சிஓவி-2 கிருமியின் அதே அள­வில் உள்­ளன.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல் ­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த மூன்று ஆய்­வா­ளர்­கள் இக்­க­ரு­வியை உரு­வாக்­கி­யுள்­ள­னர். சில்லு, இரண்டு செண்­டி­மீட்­ட­ருக்கு இரண்டு செண்­டி­மீட்­டர் அள­வி­லா­னது. அதில் 25 சிறு பள்ளங்கள் உள்ளன. ஒளியாற் றலைப் பயன்படுத்தி கிருமி பள்ளங்களில் தள்ளப்படுகிறது.