கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அமேசான்

சிங்­கப்­பூ­ரில் அடுத்த ஆண்டு

இறு­திக்­குள் மேலும் 200 வேலை வாய்ப்­பு­களை அமேசான் நிறு­வ­னம் உரு­வாக்க இருக்­கிறது.

ஏஷியா ஸ்கு­வேர் டவர் 1ல் புதிய மூன்று மாடி அலு­வ­ல­கத்தை அது திறந்­துள்­ளது.

தொழில்­நுட்­பம் சார்ந்த, தொழில்­நுட்­பம் சாரா ஆரம்­ப­நி­லை­யி­லி­ருந்து நடுத்­தர நிர்­வாக வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­படும் என்று

சிங்­கப்­பூ­ருக்­கான அமேசான் மேலா­ளர் ஹன்ரி லோ தெரி­வித்­தார். சேவை நிர்­வா­கம், கணக்­கி­யல் நிபு­ணத்­து­வப் பத­வி­களும் அவற்­றில் அடங்­கும்.

அமேசா­னின் தளங்­க­ளுக்கு விற்­ப­னை­யா­ளர்­களை ஈர்த்து அவர்­க­ளது வாடிக்­கை­யா­ளர்

வட்­டத்தை விரி­வுப்­ப­டுத்­த­வும்

இந்­தப் பத­வி­யில் இருப்­ப­வர்­கள் உத­வு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அமேசா­னின் புதிய பொருட்­

க­ளை­யும் அம்­சங்­களை­யும் அறி­

மு­கப்­ப­டுத்த திட்ட நிர்­வா­கி­கள் பணி­யில் அமர்த்­தப்­ப­டு­வர். மனி­த ­வ­ளப் பிரி­வி­லும் நிதிப் பிரி­வி­லும் வேலைக்கு ஆட்­கள் எடுக்­கப்­படும் என்று திரு லோ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட 2,000 முழு­நேர ஊழி­யர்­க­ளை­யும் பகு­தி­நேர ஊழி­யர்­க­ளை­யும் அமேசான் வேலை­யில் அமர்த்­தி­யுள்­ளது. அவர்­களில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள்.

2019ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் 1,000க்கும் மேற்­பட்ட வேலை வாய்ப்புகளை நேர­டி­யாக உரு­வாக்கி ­ய­தாக அமேசான் தெரி­வித்­தது.

பய­னீட்­டா­ளர் வர்த்­த­கம், நிறு­வன விழாக்­கள் தொடர்­பாக உரு­வாக்­கப்­பட்ட 110 வேலை வாய்ப்­பு­ க­ளைத் தவிர்த்து, புதி­தாக 200 வேலை வாய்ப்­பு­க­ளை­யும் அமேசான் உரு­வாக்­கும் என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

புதிய அலு­வ­ல­கத்­தின் திறப்பு விழா­வில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பேசிய திரு லோ,

இந்­தத் தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார். புதிய அலு­வ­ல­கத்­தில் அதி­க­பட்­சம் 700 ஊழி­யர்­கள் பணி­பு­ரி­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. 30க்கும் அதி­க­மான குழுக்­கள் அங்­கி­ருந்து செயல்­படும். இவற்­றில் அமேசான்.sg, அமேசான் ஃபிரெஷ், அமேசான் விளம்­ப­ரம், பிரைம் வீடியோ ஆகியவை அடங்­கும். சிங்­கப்­பூ­ரில் அமேசா­னுக்கு இருக்­கும் அலு­வ­ல­கங்­க­ளு­டன் புதிய அலு­வ­ல­க­மும் செயல்­படும் என்­றார் திரு லோ.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய, அலு­வ­ல­கத்­துக்கு வெளி­யி­லி­ருந்து வேலை செய்ய அல்­லது சில நாட்­கள் வீட்­டி­லி­ருந்­தும் சில நாட்­கள் அலு­வ­ல­கத்­தி­லும் ஊழி­யர்­கள் பணி­பு­ரிய நீக்­குப்­போக்­கு­மிக்க அணுகு முறை கடைப்­பி­டிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஊழி­யர்­க­ளின் வேலை­யைப் பொறுத்து தகுந்த ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும் என்று திரு லோ கூறி­னார். "குறிப்­பிட்ட ஒரு நிகழ்­வுக்கு ஊழி­யர்­கள் அனை­வ­ரும் ஒரே இடத்­தில் கூடும் முறையை நாங்­கள் பின்­பற்­று­வ­தில்லை. ஆனால் நீக்­குப்­போக்­கு­மிக்க அணுகு­ முறை கடைப்­பி­டிக்­கப்­பட்­டா­லும் அலு­வ­ல­கத்­திற்கு அறவே வராத நிலை என்­றா­கி­

வி­டாது.

"வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் முறை அனை­வ­ருக்­கும் பொருந்­தாது என்று எங்­க­ளுக்­குப் புரி­கிறது. பாது­காப்­பு­மிக்க, வேலை செய்ய தோதான சுற்­றுச்­சூ­ழலை அமைப்­பதே எங்­கள் இலக்கு," என்று திரு லோ தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!