பகல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி சிங்கப்பூரரிடம் பிலிப்பீன்ஸ் விசாரணை

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி பிலிப்­பீன்­ஸில் விற்­பனை செய்­யப்­பட்ட மருத்­து­வச் சாத­னங்­க­ளின் விலையை அதிக அள­வில் உயர்த்தி பகல் கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­தாக சிங்­கப்­பூர் வர்த்­த­கர்­ மீது பிலிப்­பீன்ஸ் செனட் சபை குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

இது­தொ­டர்­பாக ஃபார்மலி மருந்­தி­யல் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான 31 வயது திரு ஹுவாங் சூ யெனி­டம் (படம்) பிலிப்­பீன்ஸ் செனட் சபை­யின் நீல நாடா குழு

விசா­ரணை நடத்தி வரு­கிறது.

ஃபார்மலி மருந்­தி­யல் நிறு­வ­னத்­துக்­கும் பிலிப்­பீன்­ஸின் சுகா­தா­ரத்­துறை, கொள்­மு­தல் சேவைத் துறை ஆகி­ய­வற்­றுக்­கும் இடை­யி­லான பரி­வர்த்­த­னை­கள் தொடர்­பாக பிலிப்­பீன்ஸ் அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

ஃபார்மலி மருந்­தி­யல் நிறு­வ­னம் அதிக அள­வி­லான ஊசி­க­ளை­யும் இதர மருத்துவச் சாத­னங்­க­ளை­யும் ஆசி­யான், ஆசிய பசி­ஃபிக் நாடு­

க­ளுக்கு விற்னை செய்து வரு­வ­தாக இணை­யம் மூலம் தக­வல் கிடைத்­தி­ருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. அந்­நி­று­வ­னத்­துக்­கும் தைவா­னில் அலு­வ­ல­கம் இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் உலக நாடு­களை கொவிட்-19 உலுக்­கி­ய­போது ஃபார்மலி மருந்­தி­யல் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் பரி­சோ­த­னைக் கரு­வி­கள், முகக்­க­வ­சம் போன்ற சாத­னங்­களை வாங்­கி­யது.

ஃபார்மலி மருந்தியல் நிறுவனம் பிலிப்பீன்ஸில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்துகொண்டது. வெறும் $16,500 மூலதனத்துடன் பிலிப்பீன்ஸில் தொழிலைத் தொடங்கிய ஃபார்மலி, $291 மில்லியன் பெறுமானமுள்ள 13 அரசாங்க ஒப்பந்தங்களைக் கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!