சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனமான 'டுரபவர்' குழுமத்துக்கு வழங்கப்படும்
$6 மில்லியன் பெறுமானமுள்ள பசுமை வர்த்தகக் கடனை எச்எஸ்பிசி சிங்கப்பூர் நீட்டித்துள்ளது.
இதன்மூலம் நிறுவன நிதி-பசுமைத் திட்டத்தின் மூலம் நிதி வழங்கும் முதல் நிதி நிறுவனமாக எச்எஸ்பிசி சிங்கப்பூர் திகழ்கிறது.
இந்தக் கடனைப் பயன்படுத்தி 'டுரபவர்' குழுமம் அதன் உயர் தொழில்நுட்ப எரிசக்தி சேமிப்புத் தீர்வுகளுக்கான மேம்பாட்டுப் பணிகளை விரைவுப்படுத்த லாம் என்று எச்எஸ்பிசி சிங்கப்பூர் கூறியது.

