தூய எரிசக்திக்கு மாற தேவையான நிதியைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள சவால்களுக்குத் தீர்வு காண, அரசாங்கத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மூத்த அமைச்சரும் சமுதாய கொள்கை
களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் நேற்று தெரிவித்தார்.
வளர்ச்சி அடைந்த, வளரும் நாடுகள் ஆகியவற்றில் உள்ள தற்போதை உள்கட்டமைப்புகளை மாற்றி புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்திக்குத் தேவையான புதிய உள்கட்டமைப்பை அமைக்க பெரும் அளவிலான முதலீடு தேவைப்
படுவதாக அவர் கூறினார்.
"இதை அரசாங்கத் துறையால் தனியாகச் செயல்படுத்த முடியாது என்று திரு தர்மன் தெரிவித்தார். தனியார் துறையாலும் இதைத் தனியாகச் செய்ய முடியாது. அதற்குப் போதுமான சலுகைகளும் இல்லை. விண்ணைத் தொடும் அளவுக்குக் கரிம வரிகள் உயர்த்தப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்," என்று மூத்த அமைச்சர் தர்மன் கூறினார்.
மாற்றுத்துக்குத் தேவையான முதலீட்டுக்கான முழுத் தொகையையும் பொது நிதியிலிருந்து பயன்படுத்தாமல் தனியார் துறையின் முதலீட்டுக்கு அபாயம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க அதைப் பயன்படுத்துவதே சிறந்த வழி என்றார் திரு தர்மன்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய நிதிச் சந்தைகள் கருத்தரங்கில் பேசிய திரு தர்மன், இதுதொடர்பான தகவல்களைத் தெரிவித்தார். அந்த இரண்டு நாள் கருத்தரங்கு இணையம் மூலம் நடைபெறுகிறது. கருத்தரங்கிற்கு சிங்கப்பூர் நிதிச் சந்தை சங்கமும் புளூம்பெர்க்கும் ஏற்பாடு செய்தன.
திரு தர்மனுடனான கலந்துரையாடலில் புளூம்பெர்க் செய்தி நிறு
வனத்தின் தென்கிழக்காசியப்
பிரிவின் தலைமை அனைத்துலகச் செய்தியாளர் ஹஸ்லிண்டா அமின் தொகுப்பாளராகச் செயல்பட்டார்.
புதைபடிவ எரிபொருட்களின் அளவு குறைந்து வருவதைச் சுட்டிய திரு தர்மன், தூய எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளபோதும் அது போதுமான அளவில் இல்லை எனத் தெரிவித்தார்.
"இதன் காரணமாக வழக்க
மாகப் பயன்படுத்தப்படும் எரி
பொருட்களின் விலையும் தூய எரிசக்தியின் விலையும் ஒரே நேரத்தில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்," என்றார் திரு தர்மன்.

