புதுப்பிக்கப்பட்ட சுவா சூ காங் பொது நூலகம் எதிர்கால நூலகங்களின் பிரதிபலிப்பு

புதுப்பிக்கப்பட்ட சுவா சூ காங் பொது நூலகம் எதிர்கால நூலகங்களின் பிரதிபலிப்பு

1 mins read
212e2190-94a4-46e5-bfb5-e8cf3518d23d
நீடித்த நிலைத்தன்மை தொடர்பாக நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை நேரில் கண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதுப்­பிக்­கப்­பட்ட சுவா சூ காங் பொது நூல­கம் இன்று பொது­மக்­க­ளுக்­குத் திறக்­கப்படு­கிறது. எதிர்­கா­லத்­தில் நூல­கங்­கள் எப்­படி இருக்­கும் என்­பதை இந்­நூ­ல­கம் காட்­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 'இயற்­கை­யு­டன் மீண்­டும் இணை­வோம்' எனும் கருப்­பொ­ரு­ளுடன் திறக்­கப்­படும் சுவா சூ காங் பொது நூல­கம், நீடித்த நிலைத்­தன்மையை மைய­மா­கக்கொண்டு சிங்­கப்­பூ­ரில் கட்­டப்­பட்ட முதல் நூல­க­மா­கும். நூல­கத்­தில் உள்­ள­ரங்­குத் தோட்­டம், ஹைட்­ரோ­பொ­னிக்ஸ் அறை, புதிய மின்­னி­லக்­கக் கற்­றல் சாத­னங்­கள் ஆகிய வச­தி­கள் உள்­ளன.

நீடித்த நிலைத்­தன்மைமிக்க வாழ்க்­கை­முறை, சுற்­றுப்­புற விவ­கா­ரங்­கள் ஆகி­யவை குறித்து விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­பதே இந்த அம்­சங்­க­ளின் இலக்கு.

சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் உள்ள 'லோட் ஒன்' கடைத்­

தொ­கு­தி­யின் நான்­கா­வது, ஐந்­தா­வது மாடி­களில் நூல­கம் அமைந்­துள்­ளது. ஏழா­வது 'அடுத்த தலை­முறை நூல­க­மாக' உரு­வெ­டுக்க கடந்த இரண்டு ஆண்­டுக­ளாக அங்கு புதுப்­பிப்­புப் பணி­கள் நடை­பெற்­றன.

நூல­கத்­திற்­குச் செல்­வோர் தங்­கள் கைபே­சி­யைப் பயன்­ப­டுத்தி கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்து மெய்­நி­கர் கற்­றல் பய­ணத்­தில் பங்­கெ­டுக்­க­லாம்.

புதுப்­பிக்­கப்­பட்ட நூல­கத்­தின் திறப்பு விழா­வில் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று கலந்­து­கொண்டு பேசி­னார்.

பொது­மக்­க­ளின் அறி­வாற்­றல் மேம்­ப­ட­வும் பல்­வேறு கலா­சா­ரங்

­க­ளைப் பற்றி அவர்­கள் கற்­றுக்­கொள்­ள­வும் நூல­கம் பெரு­ம­ள­வில் பங்­க­ளிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

"வேக­மாக மாறி­வ­ரும் நமது சமு­தா­யத்­தின், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தேவை­க­ளை­யும் ஆர்­வத்­தை­யும் பூர்த்தி செய்­யும் வகை­யில் நமது நூல­கங்­கள் மாறி வரு­கின்­றன," என்று அமைச்­சர் டியோ கூறி­னார்.

2017ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆறு நூல­கங்­கள் புதுப்­பிக்­கப்­பட்டு மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளன.