ரோச்சோரில் முதல் ‘பிடிஓ’ திட்ட வீடுகள்

முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டம் நவம்பரில் தொடக்கம்

முதன்மை வட்­டா­ரத்­திற்­கான புதிய பொது வீட­மைப்பு முறை­யின்­கீழ் ரோச்­சோ­ரில் அடுத்த மாதம் புதிய (தேவைக்­கேற்ப கட்­டித்­த­ரப்­படும்) பிடிஓ திட்­டம் தொடங்­கப்­பட உள்­ளது.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் உரு­வா­கும் கட்­ட­டங்­களில் 960 மூவறை மற்­றும் நான்­கறை வீடு­கள் கட்­டப்­படும். முதன்மை வட்­டா­ரத்­தில் எல்­லாப் பிரி­வி­ன­ரை­யும் குடி­ய­மர்த்­தும் முயற்­சி­யின்­கீழ் 40 ஈரறை வாடகை வீடு­களும் இங்கு அமை­யும்.

ஜாலான் புசார் எம்­ஆர்டி நிலை யத்தை அடுத்­துள்ள வெல்டு ரோடு மற்­றம் கிளந்­தான் ரோடு ஆகிய வற்­றின் அருகே காலி­யாக உள்ள இரு நிலப்­ப­கு­தி­களில் இந்த வீடு­கள் கட்­டப்­பட இருப்­ப­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் நேற்று கூட்­டா­கத் தெரி­வித்­தன.

சிம் லிம் டவர் கட்­ட­டத்­திற்கு அருகே இருந்த திறந்­த­வெளி கார் நிறுத்­து­மி­ட­மும் 2017 ஜூலை மாதம் சுங்காய் ரோடு அருகே காலி செய்­யப்­பட்ட பழைய பொருள் சந்தை இட­மும் வீடு­கள் கட்ட பயன்­ப­டுத்­தப்­பட இருக்­கும் நிலப் பகு­தி­கள்.

வருங்­கா­லத்­தில் இந்த வீடு­களில் குடி­யே­று­வோ­ருக்கு பல வச­தி­கள் காத்­தி­ருக்­கின்­றன.

எம்­ஆர்டி நிலை­யம், பெர்சே உணவு நிலை­யம் மற்­றும் ஸ்டாம்­ஃபர்ட் தொடக்­கப் பள்ளி போன்­றவை அவர்­க­ளின் வீட்­டி­லி­ருந்து நடக்­கும் தூரத்­தில் அமைந்­தி­ருக்­கும். ரோச்­சோர் கட்­டு­மா­னத் திட்­டத்தை அடுத்து முதன்மை வட்­டா­ரங்­க­ளி­லும் அவற்­றைச் சுற்றி உள்ள நகர மையத்­தி­லும் மேலும் அதி­க­மான வீவக வீடு­கள் படிப்­ப­டி­யா­கக் கட்­டப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

புதிய வீட­மைப்பு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துச் செல்­லும் முயற்­சி­யாக ஆண்­டுக்கு குறைந்­த­பட்­சம் ஒரு முதன்மை வட்­டா­ரத்­தி­லா­வது வீட­மைப்­புத் திட்­டம் அமை­யும் என்­றும் அவர் கூறி­னார்.

இவ்­வாறு செய்­வ­தன் மூலம் புதிய முன்மை வட்­டார வீடு­க­ளுக்­கும் இதர வட்­டார வீடு­க­ளுக்­கும் இடை­யி­லான விகி­தா­சா­ரம் பன்­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட வீட்டு விநி­யோ­கத்தை உறு­தி­செய்­யும் பொருட்டு ஆண்­டுக்­காண்டு வேறு­படும் என்­றார் திரு லீ.

முதன்மை வட்­டா­ரங்­க­ளுக்­கான புதிய பொது வீட­மைப்பு முறை­யின்­கீழ் அமை­யும் வீடு­களை 10 ஆண்டு காலம் என்­னும் குறைந்­த­பட்ச குடியிருப்பு கா­லத்­திற்­குப் பின்­னரே விற்­க­மு­டி­யும்.

இந்த வீட்டை வாங்­கு­வ­தற்­கான ஒட்­டு­மொத்த மாத வரு­மான வரம்பு $14,000.

அதே­நே­ரம் இதர வட்­டார பிடிஓ திட்ட வீடு­க­ளுக்­கான குறைந்­த­பட்ச குடியிருப்பு கா­லம் ஐந்­தாண்­டாக இருக்­கும்.

இந்த வீடு­களை மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் வாங்­கு­வோ­ருக்கு வரு­மான வரம்பு ஏது­மில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!