இறைச்சி, கடலுணவு மற்றும் இதர உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காக ஓர் இறக்குமதி நிறுவனத்திற்கும் அதன் இயக்குநருக்கும் நேற்று
அபராதம் விதிக்கப்பட்டது. 'ரிலையபிள் டிரான்ஸ்போர்ட் அண்ட் லாஜிஸ்டிக் சர்விசஸ்' என்னும் அந்நிறுவனம் 735 கிலோ இறைச்சி மற்றும்
கடலுணவுப் பொருட்களையும் 10 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளையும் 503 கிலோ பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களையும் இந்தோனீசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பொருட்களை சிங்கப்பூர் உணவு முகவை (எஸ்எஃப்ஏ) பறிமுதல் செய்தது.

