$83,000 லஞ்சம் பெற்றதாக பாதுகாப்பு நிறுவன முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

செர்­டிஸ் சிஸ்கோ பாது­காப்­புச் சேவை நிறு­வ­னத்­தின் முன்­னாள் மூத்த மேலா­ளர் ஒரு­வர் கடன் என்ற பெய­ரில் $83,000 லஞ்­சம் பெற்­ற­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

ஆல்­வின் லீ மே சிம், 41, (படம்) எனப்­படும் அவர் அந்த நிறு­வ­னத்­தின் பாது­காப்­புத் தீர்வு மற்­றும் வளர்ச்­சித் துறை­யில் வேலை செய்­த­போது 'ஸ்கார் சர்­விசஸ்' என்­னும் மற்­றொரு பாது­காப்பு நிறு­வ­னத்­தின் இரு பங்­கு­தா­ரர்­

க­ளி­ட­மி­ருந்து 2017 ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் லஞ்­சம் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் மீது 13 லஞ்­சக் குற்­றச்­சாட்­டு­களும் ஒன்­பது ஏமாற்­றுக் குற்­றச்­சாட்­டு­களும் நேற்று சுமத்­தப்­பட்­டன. லஞ்­சம் கொடுக்க முன்­வந்ததாகக் கூறப்பட்ட அப்­துல் ரஸீஸ் ரசிட், 35, நஸ­ரி­ஷம் முகம்­மது இசா, 42, ஆகி­யோர் மீது லஞ்­சம் மற்­றும் போலி ஆவ­ணக் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

செர்­டிஸ் சிஸ்கோ நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து வர்த்­தக அனு­கூ­லன்­

க­ளைப் பெறும் பொருட்டு இந்த இ­ரு­வ­ரும் லீக்கு முதலில் $43,000 லஞ்­சம் கொடுத்­த­னர். பின்­னர் கார் கடன் என்ற பெய­ரில் லீக்கு நஸ­ரி­ஷம் $40,000 கொடுத்­ததாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!