ஆசியான், இந்தியாவுக்கு இரு முன்னுரிமை துறைகள்

ஆசியான், இந்தியாவுக்கு இரு முன்னுரிமை துறைகள்

3 mins read
95096913-ef46-48ce-b6b4-0a87ed7989b0
-

மின்னிலக்க உருமாற்றம், பொதுச் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைக்க பிரதமர் லீ யோசனை

ஆசி­யா­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடைப்­பட்ட உற­வுக்­கான ஒருங்­ கிணைப்பாளர் என்ற முறை­யில், மின்னிலக்க உரு­மாற்­றம், பொதுச் சுகா­தார ஒத்­து­ழைப்பு ஆகிய இரு துறை­க­ளுக்­கும் முன்­னு­ரிமை தர சிங்­கப்­பூர் உறு­தி­பூண்டு இருப்­பதாக பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தெரி­வித்­தார்.

இந்த வட்­டார நாடு­க­ளின் தலை­வர்­க­ளு­டன் கூடிய மெய்­நி­கர் மூன்று நாள் கூட்­டத்­தின் கடைசி நாளான நேற்று பிர­த­மர் உரை­யாற்றினார்.

ஆசி­யான் அமைப்பு, இந்­தி­யா­வின் துடிப்பு­மிக்க தொழில்­நுட்­பத் துறையை­யும் புதி­தாக நிறு­வ­னங்­களைத் தொடங்­கு­வ­தற்­கான ஆதரவு சூழல்­க­ளை­யும் பயன்­ப­டுத்­திக்கொண்டு நடை­மு­றைக்கு உகந்த வழி­களில் வளர்ச்சி காண முடி­யும் என்­றும் நிதி மற்­றும் வர்த்­தக துறை­களில் அனு­கூ­லங்­க­ளைப் பெற முடி­யும் என்­றும் குறிப்­பிட்­டார்.

பல­ரை­யும் உள்­ள­டக்­கக்­கூ­டிய, சேர்ந்து செயல்­ப­டக்­கூ­டிய மின்னிலக்க, நிதித் துறை ஏற்­பாட்டு முறை­களை உரு­வாக்­கு­வ­தில் ஒத்­து­ழைப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் இருப்­ப­தா­க­வும் திரு லீ தெரி­வித்­தார். இரண்டு தரப்­பு­க­ளைச் சேர்ந்த சமூ­கங்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் அதிக வாய்ப்பு வச­தி­கள் இதனால் உரு­வா­கும் என்­றும் அவர் கூறி­னார்.

ஆசி­யான்-இந்­தியா உச்­ச­நிலை மாநாட்­டில் பல நாடு­க­ளின் பிர­த­மர்­கள் கலந்­து­கொண்­ட­னர். இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் மாநாட்­டில் பங்­கெ­டுத்­துக்­கொண்­டார்.

அவர்­க­ளி­டம் உரை­யாற்­றிய திரு லீ, உல­கின் மருந்து விநி­யோக ஏற்­பாட்­டில் இந்­தியா மிக முக்­கி­ய­மான பங்­காற்றி இருக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

அந்த மருந்­து­களை தென்­கிழக்கு ஆசி­யா­விற்­கும் அதற்கு அப்­பா­லும் கொண்டு செல்­வ­தற்கு ஆத­ரவு அளிக்­கும் ஆற்­றல்­மிகு விமா­னம், கப்­பல் போக்­கு­வ­ரத்து மைய­மாக சிங்­கப்­பூர் திகழ முடி­யும் என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

ஆசி­யா­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் உற­வு­கள் ஏற்­பட்டு 30 ஆண்­டு­கள் ஆகின்­றன. அதைக் கொண்­டா­டும் வகை­யில் 2022ஆம் ஆண்டு ஆசி­யா­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையிலான 'தோழமை ஆண்­டாக' கடைப்­பி­டிக்­கப்­படும் என்று திரு லீ தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஆசி­யான் நாடு­களை­யும் அதன் எட்டு பங்­காளி நாடு­களை­யும் உள்­ள­டக்­கிய கிழக்கு ஆசிய உச்­ச­நிலை மாநாட்­டில் புதன்­கி­ழமை பேசிய இந்­திய பிர­த­மர் மோடி, சுதந்­தி­ர­மான, திறந்த, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒரு வட்­டா­ர­மாக இந்தோ-பசி­ஃபிக் திகழ்­வதில் இந்­தியா ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் என்று மீண்­டும் உறுதி­பட கூறி­னார்.

இந்­தியா-ஆசி­யான் தோழமை உற­விற்கு கொவிட்-19 ஒரு சோதனை என்று திரு மோடி சுட்­டிக்­காட்­டி­னார்.

சவால்­மிக்க இந்­தக் கால­கட்டத்­தில் இரண்டு தரப்­பு­களுக்கும் இடைப்பட்ட பரஸ்­பர ஒத்­து­ழைப்பு, இரு தரப்­பு­ மக்­க­ளுக்கு இடை­யில் நல்­லெண்­ணம் ஏற்­ப­டு­வ­தற்­கான அடிப்­ப­டை­யாகத் திகழ்­வதா­க­ திரு மோடி குறிப்­பிட்­டார்.

அறி­வார்ந்த நகர்­கள், இயற்­கை­வள மேம்­பாடு, இணை­யப் பாது­காப்பு, பரு­வ­நிலை மாற்­றம், சுற்றுச்­சூ­ழல் பிரச்­சி­னை­கள் போன்ற துறை­களில் ஒத்­து­ழைப்பை ஆசி­யா­னும் இந்­தி­யா­வும் தொடர்ந்து அதி­கப்­ப­டுத்தி வர­வேண்­டும் என்று பிரதமர் திரு லீ தெரி­வித்­தார்.

கடல் தூய்­மை­க்கேடு, சட்­ட­விரோத மீன்­பி­டிப்பு ஆகி­ய­வற்றை ஒடுக்­கு­வ­தன் தொடர்­பில் அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் இந்­தி­யாவு­டன் கூடிய இரண்டு பயி­ல­ரங்கு களுக்கு சிங்­கப்­பூர் கூட்­டாக ஏற்பாடு செய்­யும் என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

மியன்­மா­ரில் அமைதி ஏற்­பட ஆசி­யான் மேற்­கொள்­ளும் முயற்சி­களுக்கு இந்­தியா தொடர்ந்து ஆத­ரவு வழங்­கும் என்­றும் திரு லீ நம்­பிக்கை தெரி­வித்­தார்.