வளர்ச்சி உதவி தேவையுள்ள பிள்ளைகளுக்கு 7 பாலர்பள்ளிகளில் முன்னோடித் திட்டம்

வளர்ச்சிக்கான தேவை­க­ளு­டன் கூடிய சிறார்­க­ளுக்­கான ஒரு முன்­னோடி செயல்­திட்­டத்தை ஏழு பாலர்­பள்ளிகள் தொடங்க உள்­ளன.

'எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கும் ஆதரவு செயல்­திட்­டம்' என்ற அந்தத் திட்­டம் 2022 ஜூன் மாத வாக்­கில் தீவு முழு­வ­தும் உள்ள அந்த ஏழு பாலர்­பள்­ளி­களில் நடப்­புக்கு வரும். அதை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் நேற்று செங்­காங்­கில் ஒரு பாலர்­பள்­ளி­யில் தொடங்கி வைத்­தார்.

இதர ஆறு பாலர்­பள்­ளி­களும் அடுத்த ஆண்­டில் அந்­தத் திட்டத்தைத் தொடங்­கும்.

மூன்று முதல் ஆறு வரை வய­துள்ள குறிப்­பிட்ட அள­வுக்கு உதவி­கள் தேவைப்­ப­டு­கின்ற சிறார்­களுக்கு உத­வு­வது இதன் நோக்­கம் என்று அமைச்­சர் கூறி­னார்.

இத்­த­கைய சிறார்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் இப்­போது தாங்­கள் படிக்­கும் பாலர்­பள்­ளி­களில் அல்­லா­மல் ஆரம்­ப­கால தலை­யீட்டு நிலை­யங்­களில் தேவை­யான ஆத­ர­வைப் பெறு­கி­றார்­கள்.

அங்­கு­மிங்­கும் அலைய வேண்டி இருப்­ப­தால் இத­னால் குடும்­பங்­களுக்­கும் சிறார்­க­ளுக்­கும் சிர­மங்­கள் ஏற்­ப­டு­வ­தாக திரு­வாட்டி சுன் தெரிவித்தார். இதர சிறார்­க­ளு­டன் சேர்ந்து பயி­லும்­போது மிக முக்கிய சமூகத் தேர்ச்­சி­களை இத்­தகைய சிறார்­கள் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­றும் அவர் கூறினார்

முன்­னோ­டித் திட்­டம் மூன்­றாண்டு காலத்­திற்குச் செயல்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதா­க­வும் அமைச்சர் திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!